Thursday, August 6, 2009

புகைப் பிடிப்பு தடுப்பு சட்டம் புகையாய் போய் விடுமா??

(என்னுடைய மற்றும் ஒரு ப்லோக்-இல் இருந்து இந்த ப்லொக்கிற்கு மாற்றியது)
நல்ல சட்டம். நான் அரசை முதலில் பாராட்டுகிறேன். ஆனால் இந்த சட்டம் ஒன்றும் தமிழ் நாட்டுக்கு புதியதல்லவே!! சில வருடங்களுக்கு முன்பே அமலுக்கு கொண்டு வர பட்டு பின்பு நீக்கப் பட்ட சட்டம்.
அப்பொழுது இருந்த நிலைமையை சற்று rewind செய்து பார்போம்.

  • “Break the Rules” இதற்கென்றே அலையும் சிலர் அந்தச் சட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை என்று அதையும் மதிக்கவில்லை அதை போட்டவர்களையும் மதிக்கவில்லை.
  • "அப்பன் பணம் இருக்கு, எனக்கு என்ன கவலை??" என்று பைன் கட்டவோ லஞ்சம் குடுக்கவோ துணித்து விட்டனர் இன்னும் சிலர்.
  • "எனக்கு ஏன் யா வம்பு?? என் பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கு!" என்று கஷ்டப்பட்டு வெளியே புகை பிடிப்பதைத் தவிர்த்து, ஆபீஸ்இலோ அல்லது திருட்டு தனமாக வீட்டிலோ பிடிக்க ஆரம்பித்தனர்.
  • "ஏன் வாய் இது ஒண்ணும் பப்ளிக் இடம் இல்லை" என்று சொல்லும் சிலஹீரோக்களுக்கும் இந்த லிஸ்ட்இல் இடம் நிச்சயம் உண்டு. அந்தகாமெடிக்குநாமும் விழுந்து விழுந்து சிரித்தாகி விட்டது.

இப்படியாக அந்தச் சட்டம் நம் சென்னை கூட்டத்தில் காணாமல் போன குழந்தைய போல் தொலைந்து விட்டது. அப்பாடா ஒழிஞ்சுது சனியன்! மறுபடியும் அங்காங்கே "டி" கடைகளில் தும்மும் , டி கிளாஸ்உம் , வாயில் புன்னகையும், கண்ணில் ஒரு ஜிலீர் துடிப்பும் கொண்டு இளைஞ்யர்கள் சைட் அடிக்கத் தொடங்கி விட்டார்கள் :P

மிடில் எஜ் மற்றும் வயசான மற்றும் சில மிடில் கிளாஸ் மாதவர்களோ, இனிமேல் "கண்ணாமூச்சி ரே ரே" என்று ஒளிந்து விளையாடத் தேவை இல்லை என்று குதூகலித்தனர்!

எனக்கோ வந்த வேகத்திலேயே இருந்த இடம் தெரியாமல் இந்த சட்டம் போய் விட்டதே??(ஆச்சர்ய குறிக்கு இங்கு இடம் இல்லை. போகும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று தெரியாது :P) என்ற வருத்தம் :(

பீச்இல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டி பிடித்தோ அல்லது முத்தம் இட்டுக்கொண்டோ இருப்பதை பார்த்து சிலர் முகம் சுளிப்பதை போல் நான் சிகரெட்உடன் செல்லும் யாரைப் பார்த்தாலும் முகம் சுளிப்பேன். மனசுக்குள் கண்டபடி திட்டியும் வைப்பேன் (அதெல்லாம் censored :P)

இப்படி கடந்தது பல வருடங்கள். அட! மீண்டும் அதே சட்டம், இந்தியா முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அக்டோபர் இரண்டு முதல்!!(எவ்வளவு நாள் இந்தச் சட்டம் இருக்கும் என்பது, சட்டம் போடவர்களுக்கே தெரியாது, ஆகையால் என்னை வம்புக்கு இழுக்காதீங்க!!)

இந்நிலையில் போன முறை இருந்ததாக நான் கூறி இருந்த சில குறைபாடுகளை நாம் இங்கு பார்ப்போம்.

  • “break the rules” பார்ட்டிகள் "நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால்..." என்று பாடிய திரு. எம் ஜி ஆர் அவர்கள் சொன்னால் கூட கேட்க மாட்டார்கள் இவர்கள். "பட்டால் தான் புரியும்" என்று அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோம்.
  • "அப்பன் பணம் இருக்குல எனக்கு என்ன கவலை??" எனக்கு ஒரே ஒரு பாடல் வரி தான் ஞயாபகம் வருகிறது "அய்யயோ வாய கொஞ்சம் மூடு.."
  • "எனக்கு ஏன் வம்பு...??" பார்ட்டிகள். பாவம் இவர்கள் தான் "தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை" போல் அரசாங்கம் சொல்வதற்கும் 'ஆமாம் சாமி' போட வேண்டும். வீட்டில் பொண்டாட்டி அல்லது அம்மா, அப்பா இருந்தால் அவர்களுக்கும் 'ஆமாம் சாமி' போட வேண்டும். இவர்கள் வடிவீளுவைப் போல "ரொம்ப நல்லவர்கள்! எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்!! :P"
  • "என் வாய் இது ஒண்ணும் பப்ளிக் இடம் இல்ல" ஹீரோக்கள். ஹ்ம்ம் ...ஹீரோக்கள் என்றாலே வாலிபர்கள் மானஸில் கேக்கவா வேணும். ஒரு தனி கோவிலே உண்டு. இவர்களை விட்டால் "கேட்டுப் போவது எப்படி??" என்றுஒரு புத்தகமே எழுதுவார்கள். அதையும் கண்டிப்பாக "பெஸ்ட் செல்லேர்" ஆக்குவது நம் கடமை. :P
நான் அக்டோபர் இரண்டு அன்று ஆட்டோவில் டி.நகர் சென்றிருந்தேன். தீபாவளிக்கு துணி வாங்க. ஆனால் நான் போட்டு இருந்த துணியே கிழிந்து விடும் அளவிற்கு கூட்டம். சரி அது வேறு விஷியம், நம் விஷியதிற்க்கு வருவோம். நான் பயணித்த ஆட்டோகாரர் கூறினார் ,

"மேடம் புகை பிடித்தல் பொது இடங்களில் தவறு என்பதை விட, சிகரெட் உற்பத்தியையே நிறுத்தலாம் அல்லவா??" (இந்த அறிவில் பாதியாவது நமது சினிமா ஹீரோக்களுக்கு இருந்திருந்தால்?? அதான் இல்லையே மேலே பார்போம்).

அவர் கூறியது சரி தான் ஆனால் நமது நாடு நம்பி இருக்கும் முக்கிய வரிப் புழக்கத்தில் சிகரெட் உற்பத்தியும் ஒன்று!!

இதை விட பெரியதாய் அவர் ஒன்று கூறினார் " இனிமே எல்லா இடத்துலயும் லஞ்சம் தான் மேடம். பொது இடத்துல ச்மொகே பண்ண கூடாதுன்னு சொன்னதும் முதல்ல சந்தோஷ பட்டவங்க நம்ம போலீஸ் தான் மேடம்"(இதற்க்கு நோ கமெண்ட்ஸ் இதெல்லாம் பெரிய இடத்து விழியம்!! :P)

ஹெல்மெட் அணியும் விஷியத்தை சற்று தளர்த்திக் கொண்ட நமது தமிழக அரசு இந்த விஷியத்தில் எப்படியோ??

- பொறுத்திருந்து பார்ப்போம்!