இருக்க அவன் கண்ணில் சற்று படபடப்பும், தவிப்பும், எதிர்பார்ப்பும்தெரிகிறது.
சற்று மெலிந்தும், நல்ல உயரமும், மாநிறமும், அரும்பு மீசையும் கொண்ட 21 வயது B .E . முடித்து, GRE படிக்கிறேன் பேர் வழி என்று, அப்பன் காசில் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் அவன் பெயர் சீனு செல்லமாக "scene " சீனு என்று அழைக்கப் படும் அவன் காத்திருப்பது ஒரு பெண்ணிற்க்காக (நீங்கள் நினைத்தது சரி தான்). Watchஐயும் ரோட்டையும் மாறி மாறி பார்த்த படி அவன் நின்று கொண்டிருந்தான்.
சற்று மெலிந்தும், நல்ல உயரமும், மாநிறமும், அரும்பு மீசையும் கொண்ட 21 வயது B .E . முடித்து, GRE படிக்கிறேன் பேர் வழி என்று, அப்பன் காசில் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் அவன் பெயர் சீனு செல்லமாக "scene " சீனு என்று அழைக்கப் படும் அவன் காத்திருப்பது ஒரு பெண்ணிற்க்காக (நீங்கள் நினைத்தது சரி தான்). Watchஐயும் ரோட்டையும் மாறி மாறி பார்த்த படி அவன் நின்று கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் கண்ணில் ஒரு சந்தோஷம். 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாய் எரிந்தது அவன் முகம். அவன் நிற்கும் மரத்தருகே வந்து நின்றது ஒரு ஆட்டோ. வேகமாக ஒரு அரை விட்டால் இறந்து விடும் தோற்றத்துடன், முகம் மிக அழகுடனும் ஒரு tube tops மற்றும் tight jeans உடன் கையில் சிறியதாக ஒரு பையுடன் காணப்பட்ட அவள் பெயர் ப்ரியா. மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கின்றாள்.
பிரியா: ஹாய் சீன் எப்ப வந்த?
சீனு: இப்ப தான் ப்ரியா வந்து 5 minutes ஆச்சு.
ப்ரியா: சாரி டா! ரோடு-ல ரொம்ப டிராபிக். வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
ஜோடி 2 :
காந்தி சிலை அருகே இருக்கும் ஒரு சில பேர்களின் நடுவே, கண்ணில் பதற்றத்துடனும், அவ்வப்பொழுது எப்பொழுது விழுந்து விடுமோ கண்ணீர், என்ற பயத்துடனும் அமர்ந்திருந்தாள் ஸ்வர்ணலதா என்கிற ஸ்வர்ணா. அவளை நோக்கி பாதி ஓடிய படியும், பாதி நடந்த படியுமாக வந்தான் ஆனந்த். ஆனந்த் வருவதை பார்த்து ஸ்வர்ணா எழுந்தாள்.
ஆனந்த்: சாரி டா! ரோடு-ல ரொம்ப டிராபிக். வண்டி ஓட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடறது.
ஸ்வர்ண: பரவா இல்லை. வாங்க உள்ள போகலாம்.
இருவரும் பீச்-ஐ நோக்கி உள்ளே ஆள் சற்று கம்மியாக இருக்கும் இடமாக பார்த்து நடந்தார்கள்.
ஜோடி 1 :
ப்ரியா: வா உள்ள போகலாம்.
இருவரும் ஒரு ஓரமாய் இருக்கும் டேபிள்-ஐ தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். R . K . சாலையில் உள்ள திறந்த வெளியுடன் கூடிய pizza கடை அது.
சீனு: சரி நான் பொய் ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு வரேன்.
என்று கூறி உள்ளே சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு பில்-உடன் வந்தான். வந்தவன் அவளுக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்.
ப்ரியா: (அவன் கையில் இருக்கும் பில்-ஐ வாங்கி பார்த்து விட்டு) நல்ல வேளை, "thin crust " ஆர்டர் பண்ணின. நான் இப்ப தான் லைட் ஆ சாப்டுட்டு வரேன்.
சீனு: (அவன் மனதிற்குள்) "நாம முன்ன பின்ன இந்த எழவ தின்னு இருந்தா தான நமக்கு தெரியும்?? ஏதோ குத்து மதிப்பா ஆர்டர் பண்ணினது நமக்கு சாதகமா முடிஞ்சுது டா சாமி" என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
சீனு: Pizza வர எப்டியும் 15 நிமிடங்கள் ஆகும் ஏதாவது பேசேன்.
ப்ரியா: என்ன பேசறது??
ஜோடி 2 :
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, வெளிச்சமும் அதிகம் இல்லாத ஒரு இடமாக பார்த்து இருவரும் மெளனமாக அமர்ந்து கொண்டிருன்தனர்.
ஆனந்த்: ஏதாவது பேசேன்??
ஸ்வர்ணா: என்ன பேசறது?? எத பத்தி பேசறது?? நம்ம காதல பத்தியா? இல்ல அது சுனாமி வந்து அடிச்சுட்டு போனா மாறி நம்ம வாழ்க்கையே நாசம் பண்ணிடுச்சே அத பத்தியா?
ஆனந்த்: இன்னிக்கி நாம எதாவது ஒண்ணு முடிவு பண்ணியே ஆகணும். நாம எடுக்க போற முடிவைப் பத்தி பேசலாம்.
ஜோடி 1 :
சீனு: உன்னோட முடிவ பத்தி?? இன்னிக்கி சொல்றேன்னு சொன்னியே??
ப்ரியா: என்ன அவசரம் போகும் பொது சொல்லலாம்னு நெனச்சேன். OK இப்பவே சொல்லிடறேன். நீ இந்த chair -ல வந்து உக்காரு.
சீனு எழுந்து அவள் அருகில் இருக்கும் நாற்காலியில் உக்கார்ந்தான்.
ப்ரியா: (அவன் கையை பிடித்துக் கொண்டு) I love you .
அவ்வளவு தான் சீனு முகத்தில் 10000 வாட்ட்ஸ் பல்பு பிரகாசமாக எரிந்தது. (நெறைய சுவிட்ச் வெச்சுண்டு இருக்கான் அம்பி situation-கு தகுந்தாப்ல பட்டன்-ஐ தட்டிடுவான்).
சீனு: thank you . (ஆனால் அவன் மனதில்) "ச, சாதரணமான என்னால இவள மாறி பொண்ண உஷார் பண்ண முடியாதுன்னு நெனச்சேன். இனிமே என் friends முன்னாடி நல்லா சீன் போடலாம்" என்று நினைத்துக் கொண்டான். அதில் அவன் சந்தோசம் இரட்டிப்பு ஆனது.
ப்ரியா: (அவள் மனதில்) "கொஞ்ச நாள் சுற்றுவோம் சரி வரலேனா கழட்டி விட்டுடலாம்."
அவள் இங்கு வருவதற்கு முன்னமே சுமார் 1 மணி நேரம் அவள் தோழிகள் அவளுக்கு 1008 எச்சரிக்கைகளை குடுத்தனர், ஒரு burger shop - இல் உக்கார வைத்து. அங்கே சும்மாவா இருந்திருப்பார்கள். வயிறு நிறைய கொட்டியும் கொண்டாகிவிட்டது. இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா அவள் thin crust ஆர்டர் பண்ணியவனை பாராட்டியதற்கு காரணம்.
(கதையின் நடுவில் என்ன வள வளன்னு பேச்சு அப்டீன்னு நீங்க நினைக்கறது தெரியுது :P ). ப்ரியாவும், scene உம் ஒருவர் கையை ஒருவர் பிடித்த படி கண் கொட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.
சர்வர்: சார், யுவர் coke.
ப்ரியாவும் சீனுவும் அவர்களின் தலையில் இடி விழுந்தால் கூட தெரியாதது மாறி உக்காந்து கொண்டு இருந்தார்கள்.
மீண்டும் சர்வர்: சார் நீங்க ஆர்டர் பண்ணின coke . எங்க வைக்கட்டும்??
மீண்டும் சர்வர்: சார் நீங்க ஆர்டர் பண்ணின coke . எங்க வைக்கட்டும்??
ப்ரியாவும் சீனுவும் அவங்க ஆர்டர் பண்ணின pizza வ நாய் கவ்விண்டு போனா கூட கவலை பட மாட்டாங்க போல. தலையில் அடித்துக் கொள்ளாத கொறையா அந்த coke -ஐ டேபிள் மேல் வைத்து விட்டு சர்வர் உள்ளே சென்று விட்டான்.
அந்த வோடபோன் விளம்பரம் ஒன்றில் திருடிட்டு போறது கூட தெரியாத மாதிரி தொலைகாட்சி-யில் தொலைந்து பொய் இருக்குமே ஒரு ஜூ ஜூ அது மாதிரி இவங்க ரெண்டு பெரும் உக்காந்துண்டு இருந்தாங்க.
அந்த வோடபோன் விளம்பரம் ஒன்றில் திருடிட்டு போறது கூட தெரியாத மாதிரி தொலைகாட்சி-யில் தொலைந்து பொய் இருக்குமே ஒரு ஜூ ஜூ அது மாதிரி இவங்க ரெண்டு பெரும் உக்காந்துண்டு இருந்தாங்க.
( A ) திடீரென்று ப்ரியா அவள் தலையை குனிந்து அவன் கைகளில் முத்தமிட்டாள். (வாசகர்கள் A rating -ஐ கவனிக்கவில்லை என்றால் ஒரு முறை மீண்டும் கவனித்து விட்டு அந்த வாசகத்தை படிக்காமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)
சீனு: அட டா நீ இங்க முத்தம் குடுத்தா எனக்கு முட்டில சில்லுனு இருக்கு. (இப்ப இவன் மூஞ்சில எந்த வாட்ஸ் பல்பும் எரியல அசடு வழிஞ்சதுல பல்பு fuse ஆ போச்சு)
ப்ரியா குனிந்து பார்த்து விட்டு, கல கலவென்று சிரித்தாள். அவள் சிரிபொலி வெய்யில் காலத்து குல்பி வண்டி-யின் மணி ஓசை மாதிரியே இவனுக்கு கேட்டது. சீனுவும் கீழே குனிந்து பார்த்து விட்டு coke வந்திருப்பதை கவனித்தான்.
சீனு: coke -ஐ ஓபன் பண்ணவா??
ப்ரியா: ok
இருவரும் இங்கே coke குடிக்கட்டும் நாம் இவர்களிடம் இருந்து ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொள்வோம்.
ஜோடி 2:
ஜோடி 2:
ஸ்வர்ணா: OK . நீங்களே பேசுங்க.
ஆனந்த்: இல்ல இப்ப நீ தான் பேசணும். உன் மனசுல இருக்கறத கொட்டி தீத்துடு.
ஸ்வர்ணா: ஊர்ல உலகத்துல காதல்ங்கற பேர்ல பல பேர் காம வெறி பிடிச்சு ஆலயராங்களே அந்த மாதிரியா நாம காதல் பண்ண ஆரம்பிச்சோம்?? ஒருத்தருக்கொருத்தர் படிக்கும் போதே நல்லா உதவி பண்ணிகிட்டோம். படிச்சு முடிக்கற வரைக்கும் நமக்குள்ள நட்புங்கற எல்லை கோட்டை தாண்டி வேற ஏதாவது உணர்ச்சி எட்டி பாத்து இருக்கா?
ஆனந்த்: ஹ்ம்ம் இல்ல!
ஸ்வர்ணா: வாழ் நாள் பூரா கூட இருந்தா, ஒருத்தருக்கொருத்தர் நல்ல ஆதரவா இருப்போம். நாம நல்ல புரிஞ்சு வெச்சுண்டு இருக்கோம். ஒருத்தர் மேல ஒருத்தர் நல்ல நம்பிக்கை வெச்சு இருக்கோம். இதை எல்லாம் நினைச்சு தானே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினோம்?
ஆனந்த்: ஆமாம்.
ஸ்வர்ணா: இப்ப கூட மத்த ஜோடிங்க மாறி நாம என்ன ஊரு பூராவா சுத்தறோம்?? ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும். நம்ம அன்பு வாழ் நாள் பூறா தொடரணும்-னு நெனச்சது தப்பா??
ஆனந்த்: தப்பில்லை தான். ஆனா இத எல்லாம் பேசி என்ன ஆக போகுது?? இனிமே நடக்க போறத பத்தி பேசு மா.
ஸ்வர்ணா: இனிமே என்ன நடக்கும் நான் அவன கல்யாணம் பண்ணிண்டு, உங்கள மனசுலயும் அவன உடம்புலயும் சொமக்கணும். இல்லேனா என்ன ரெண்டு மொழம் கயிறு சுமக்கணும். இப்படி எல்லாம் சினிமா டயலாக் பேச நான்
தயாரா இல்ல. ஏதாவது பிரக்டிகல் ஆ பண்ணியாகணும். கல்யாண பத்திரிகை அடிக்க இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு.
என்ன தான் வீரா வேசமா பேசினாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளி, துளியாய் மே மாத சென்னை மழை போல துளிர்த்தது. அதை ஆனந்த் தெரிந்துகொள்ளாமல் இறுக்க,
ஸ்வர்ணா: எனக்கு பசிக்கறது. ஏதாவது வாங்கிண்டு வரியா?
மறு மொழி சொல்லாமல் ஆனந்த் அவன் மனதை அங்கேயே விட்டு விட்டு எழுந்து சென்றான்.
ஜோடி 1 :
மெகா சீரியல் மாதிரி நீண்ட இடைவேளை விட்டதற்கு மன்னிக்கவும்.
ப்ரியா: ஹெய், pizza இன்னும் வரல. நீ உள்ள பொய் வாங்கிண்டு வாயேன்??
சீனு: sure . போய் பாக்கறேன்.
சீனு உள்ளே சென்ற நேரத்தில் ப்ரியா அவளின் நெருங்கிய தோழிகளுக்கு இது வரை நடந்தவற்றை ஒரு sms -ஆக அனுப்பினாள்.
சீனு pizza -வுடன் வந்தான். டப்பாவை ஓபன் செய்த ப்ரியா சீனுவிடம் sauce போட சொன்னாள். நம்ம ஆர்வ கோளாறோ sauce பாட்டில்-ஐ திறந்து கட கடவென்று ஒரு பக்கமாக ஊற்ற. ப்ரியா-வின் முகம் சற்று சுருங்கியது.
ப்ரியா: என் கிட்ட குடு நானே ஊத்தறேன்.
என்று கூறி அவள் அந்த பாட்டில்-ஐ வாங்கி pizza -வின் மேல் பரவலாக ஊற்றினாள்.
ஒரு சிறு துண்டை எடுத்து அவனுக்கு குடுத்தாள். இந்த முறையாவது சற்று புத்திசாலி தனமாக அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்து அதன் படி செய்திருக்க வேண்டும். ஆனால், நமது மக்கு சீனு அந்த pizza துண்டை வாங்கி தோசை சாப்பிடுவது போல் மடித்து உள்ளே போட முயன்று, முடியாமல், பாதி கீழே சிந்தி...
ஒரு சிறு துண்டை எடுத்து அவனுக்கு குடுத்தாள். இந்த முறையாவது சற்று புத்திசாலி தனமாக அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்து அதன் படி செய்திருக்க வேண்டும். ஆனால், நமது மக்கு சீனு அந்த pizza துண்டை வாங்கி தோசை சாப்பிடுவது போல் மடித்து உள்ளே போட முயன்று, முடியாமல், பாதி கீழே சிந்தி...
ப்ரியாவின் முகமோ, அப்பப்பா! அத்தனை விதமாக முகம் சுளிக்க முடியும் என்று அவளை இப்பொழுது பார்த்தல் தெரிந்து விடும்.
ப்ரியா: "ஒரு pizza -வை கூட ஒழுங்கா சாப்பிட தெரிலையே?? இவன் எங்க டிஸ்கோவுக்கு எல்லாம் போய் இறுக்க போறான்???" (என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.)
ப்ரியா: நீ நெஜமாவே GRE படிக்கறியா??
சீனு: ஆமாம் அதுல என்ன டவுட்??
ப்ரியா: இல்ல அங்க எல்லாம் போனா நீ இதெல்லாம் சாப்டு ஆகணும். உனக்கு இங்கயே இவ்ளோ கஷ்டமா இருக்கே நீ வெளி நாடு போய் எப்படி இருப்ப??
ஜோடி 2 :
பாதி வழியிலேயே தன் கை பேசியில் இருந்து ஸ்வர்ணா-வை அழைத்தான் ஆனந்த்.
ஆனந்த்: நான் தான் மா. நான் இங்க வந்துட்டேனா அங்க நீ எப்படி தனியா இருப்ப?? அதான் போன் பண்ணினேன்.
ஸ்வர்ணா: சரி சரி எனக்கு எதாவதுனா நானே கூப்டறேன். போன்-ஐ வை.
ஆனந்த்: சீக்ரமா வந்துடறேன். வெயிட் பண்ணு.
ஒரு நிமிடத்தில் இரண்டு மசாலா கடலை பொட்டலங்களுடன், ஸ்வர்ணா-வை நோக்கி ஆனந்த் நடந்தான்.
ஆனந்த்: இந்தா.
குடுத்து விட்டு அவசர அவசரமாக அவன் கடலை பொட்டலத்தை திறந்து, பாதியை கீழே சிந்தி, மீதியை உள்ளே திணித்தான்.
ஸ்வர்ணா: இங்க தா, இதக் கூட ஒழுங்கா பண்ண தெரியல உனக்கு. நானே எடுத்து தரேன்.
ஜோடி 1 :
திரு திரு என்று சந்தையில் காணமல் போன குழந்தையை போல் முழித்தான் சீனு.
ப்ரியா: இரு நானே எடுத்து தரேன். நான் சாப்டறத பாத்து நீயும் சாப்டு.
சீனு: ஓகே, ட்ரை பண்றேன்.
ஒரு வாராக அறையும் கோரயுமாய் pizza சாப்பிட கற்றுக்கொண்டான் சீனு.
ப்ரியா: (அவள் மனதில்) "ச இந்த pizza -வ கூட ஒழுங்கா சாப்ட தெரியல. இவனோட நாளைக்கு நான் எப்படி நாலு எடத்துக்கு போக முடியும்?? அவசர பட்டு லவ் அ சொல்லிட்டோமோ?? இப்ப கூட ஒண்ணும் கேட்டு போகல எப்டியாவது இவன கழட்டி விட்டுடனும். இவனுக்கு அந்த ரோஹித் அ தேவளாம். வெறும் டிஸ்கோ-கு மட்டும் தான் போக மாட்டேன்னு சொன்னான். ஜிம் எல்லாம் போய் ரொம்ப ஸ்மார்ட்-அ இருந்தான். அவன விட்டுட்டு இவனோடயா??"
ப்ரியா: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா?
ஜோடி 2 :
ஆனந்த்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா?
ஸ்வர்ணா: என்ன சொல்லணும்?? அதுக்கு ஏன் permission எல்லாம் கேட்டுண்டு?
ஆனந்த்: நீ ஏன், உனக்கு பாத்து இருக்கற மாப்பிள்ளை கிட்ட நம்ம லவ் மேட்டர்- அ சொல்ல கூடாது??
ஸ்வர்ணா : நடக்கற காரியமா பேசு. நான் எங்க பொய் பாத்து அவன் கிட்ட எப்படி சொல்ல முடியும்?
ஆனந்த்: ஒரு நாள் எங்கயாவது வெளில கூப்புடு நானும் வரேன். ரெண்டு பெறுமா சேந்து நம்ம நெலமைய அவர் கிட்ட சொல்லலாமே?
ஸ்வர்ணா : நீயும் வரேனா அப்பா எனக்கு ok . ஆனா நாம பேசறத ஏத்துண்டு என்ன விட்டுட்டு போய்டுவானா?
ஆனந்த்: எதுவுமே பண்ணாம இருக்கறதுக்கு அட்லீஸ்ட் இத ஒரு ஆரம்பமா எடுத்துண்டு பண்ணலாமே.
ஸ்வர்ணா : ஆனா இது 100 பெர்சென்ட் சுமூகமா போகும்னு சொல்ல முடியாது. நமக்கே பாதகமா கூட முடியலாம். அந்த மாப்பிள்ளை கொஞ்சம் செல்வாக்கு உள்ள ஆளு. உனக்கு தான் தெரியுமே அதுனால தான அவன எனக்கு கட்டி வெச்சு அவன் மூலமா எங்காத்துல இருக்கற அடுத்த ரெண்டு ஜீவனுக்கும் எதாவது வழி பண்ண பாக்கறா எங்க அம்மா.
ஆனந்த்: எல்லாத்துக்கும் பயந்துண்டே இருந்தா ஒண்ணுமே பண்ண முடியாது. உன் கல்யாணத்துக்கு வந்து அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் வேணும்னா பண்ணலாம்.
ஸ்வர்ணா: என்ன இப்படி எல்லாம் பேசறே??
ஆனந்த்: உனக்கு கண்டிப்பா நான் வேணுமா??
ஜோடி 1 :
ப்ரியா: உனக்கு கண்டிப்பா நான் வேணுமா?
சீனு: ஹேய்! இதென்ன கேள்வி. கண்டிப்பா! அதுனால தான உன் பின்னாடி இவ்ளோ அலைஞ்சேன்.
ப்ரியா: OK . ஆனா எனக்கு நீ வேண்டாம். உனக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோணல.
சீனு: என்ன?? என்ன சொல்லற?? வேளையாடரியா?
ப்ரியா: இல்ல நெஜம்மா தான் சொல்லறேன். நான் கொஞ்சம் அவசரப் பட்டு முடிவு பண்ணிட்டேன்னு நினைக்கறேன். நாம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது.
சீனு: ஏன் ஏன் ஏன் அப்டி சொல்லற?
ப்ரியா: நான் ok சொல்லும் பொது கேள்வி கேட்டியா? இப்ப வேண்டாம்னு சொல்லும் பொது மட்டும் ஏன் கேள்வி கேக்கற?? வேண்டாம் நா விடு.
சீனு: இத ஏன் 45 minutes முன்னாடியே சொல்லல??
ப்ரியா: இதென்ன கேள்வி?
ஜோடி 2 :
ஸ்வர்ணா: இதென்ன கேள்வி?? கண்டிப்பா. உங்கள தானே நான் மனசு பூரா நெனச்சுண்டு இருக்கேன்.
ஆனந்த்: அப்ப சரி. நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இருக்குல?
ஸ்வர்ணா: ஹ்ம்ம் நம்பறேன். நம்பிக்கை இல்லாம என்ன?
ஆனந்த்: அப்ப நான் சொல்றத கேட்டு பண்ணு. எல்லாமே சரியா வரும். பிளான் A இல்லேனா பிளான் B . OK அ??
ஸ்வர்ணா: டபுள் ok . ஆனா அது என்ன பிளான் B . என் கிட்ட இது வரைக்கும் சொல்லவே இல்லையே??
ஆனந்த்: அத இனிமே தான் யோசிக்கணும்.
ஸ்வர்ணா: என்னது??
இருவரும் கல கலவென சிரித்தனர். முதல் முறையாக அவர்களின் கவலைகள் எல்லாம் கடல் அலை அழித்துச் சென்று விட்டது போல் ஒரு உணர்ச்சி.
ஜோடி 1 :
சீனுவிற்கு தான் வாங்கி வைத்திருந்த புது apache பைக்-இல் யாரோ சேற்றை வாரி இறைத்தது போன்ற உணர்ச்சி.
சீனு: என்னது? இது என்ன கேள்வியா? தமிழ் கேள்வி தான் உனக்கு அர்த்தம் நல்லாவே புரியும்.
ப்ரியா: எல்லாத்துக்கும் உனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. இது என் வாழ்க்கை. என் இஷ்ட்டப்படி வாழ எனக்கு முழு உரிமை இருக்கு. யாருக்கும்
பயப்படணும், யாருக்கும் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. காரணம் சொல்ற அளவுக்கு
ஒண்ணும் இல்ல. அப்ப ஒத்து வரும்னு தோணிச்சு இப்ப ஒத்து வராதுன்னு தோணுது. அவ்ளோ தான்.
சீனு, அவன் கண்ட கனவுக்கு வெறும் 50 நிமிடங்கள் தான் வாழ்க்கை என்று நினைக்கவில்லை. GRE கிளாஸ்-ஐ விட இவள் பின்னால் அவன் அலைந்தது தான் அதிக நிமிடங்கள் இருக்கும்.
இருவரும் எழுந்து வெளியில் வந்தனர். கண்களில் கோவமும் ஆத்திரமும் சீனுவிற்கு. அப்பாடா, தப்பிதொமடா சாமி என்ற உணர்வு ப்ரியாவிருக்கு.
ஜோடி 2 :
இருவரும் நடக்கத் தொடங்கினர்.
ஸ்வர்ணா: நீ சொல்லும் பொது இந்த ஐடியா ஒத்து வராதுன்னு தோணித்து. இப்ப ஒத்து வரும்னு தோண்றது. பாக்கலாம்.
இருவரும் தாங்கள் வண்டி நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி மௌனமாய் நடந்தனர்.
ஜோடி 1:
ப்ரியா: சரி அப்பறம் பாக்கலாம்.
சீனு: ஹேய், வந்தது வந்த பீச்சுக்காவது என்னோட வந்துட்டு போ. ஒரு friend ஆ?
ப்ரியா: பீச்சுக்கா?? இப்பவா? மணி என்னனு தெயர்யுமா?? எட்டு. சாரி, நான் வீட்டுக்கு போகணும். இல்லேனா அம்மா தேடுவாங்க.
சீனு: அப்ப உன்னோட இருந்த இவ்ளோ நேரமும் வேஸ்ட் ஆ??
ப்ரியா: வேற என்ன எதிர் பாக்கற?
சீனு: யாரவது உன் friend intro தந்துட்டு போ. ப்ளீஸ்.
ப்ரியா: இவ்ளோ தானா. இதக் கேக்கவா பீச்-கு கூப்ட?? இங்கயே தரேன். உன்னோட range -கு என்னோட friend சுவாதி தான் சரியா வருவா. கொஞ்சம் பழம். பாக்க சுமார இருப்பா. பரவாலயா ?
சீனு: இப்படி மொட்டையா சொன்னா எப்படி? போட்டோ ஏதாவது இருந்தா காட்டு.
ப்ரியா அவளின் மொபைல் போன்-ஐ திறந்து அதில் இருக்கும் சுவாதி-இன் படம் ஒன்றை அவனிடம் காட்டினாள்.
சீனுவோ , அயராது பாலிவுட் நடிகைகளுடன் நடித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சில தமிழ் ஹீரோக்கள், அவர்கள் "முடியாது" என்று சொன்னவுடன் உள்ளூர் நடிகைகளே மேல் என்று சற்று ஏமாற்றமடைந்த முகமும், "இந்த பழம் புளிக்கும்" என்ற மனப் பான்மைக்கும் வருவார்களே அது போல் ஆகி விட்டான்.
சீனு: சரி அப்ப போன் பண்ணி தா.
ப்ரியா: என்னது போன் ஆ?? கண்டிப்பா முடியாது.
சீனு: ப்ளீஸ். ப்ளீஸ் ப்ளீஸ். இது கூட பண்ண மாட்டியா??
பிரியா: ok ! ok ! பண்றேன்.
என்று கூறி தன்னுடைய செல் போன்-இல் சுவாதி -யின் நம்பர்-ஐ டயல் செய்தாள்.
சுவாதி: ஹாய், ப்ரியா என்ன இப்ப போன் பண்ணி இருக்க??
ப்ரியா: ஹே சாரி யா, நான் சீனு ஓட இருந்தேனா. நம்ம friends எல்லார் போட்டோ-வும் காமிச்சேன். உன் போட்டோ-வ பாத்துட்டு உன் கூட பேசியே ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சான் அதான் கால் பண்ணினேன். sorry for the disturbance .
சுவாதி:ச ச அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.
(சுவாதி-இன் மனமோ) "தான் போட்ட பந்தில் batsman நிச்சயமாக அவுட் ஆகி விட்டான் என்ற சந்தோஷத்தில் இருக்கும் bowler -ஐ போல இருந்தது. ஆனால் umpire -கு அல்லவா தெரியும் அது நோ பால் என்று".
இருவரும் இரண்டு நிமிடங்கள் போன்-இல் பேசினார்கள். சீனு சுவாதி-இன் நம்பர்-ஐ வாங்கிக் கொண்டான்.
ப்ரியா: சரி அப்ப நான் கெளம்பறேன்.
என்று தன கையை நீட்டினாள். பத்து வினாடிகள் இருவரும் கையை குலுக்கினார்கள்.
ஜோடி 2 :
ஸ்வர்ணா: சரி அப்ப நான் கெளம்பறேன்.
ஆனந்த்: வண்டி எடுத்துண்டு வா. வாசல் வரைக்கும் நானும் வரேன்.
ஸ்வர்ணா: ஹலோ, பீச்-கு எது வாசல்??
ஆனந்த் அசடு வழிந்து ஒரு சிரிப்பை போட்டு விட்டு. பிடித்திருந்த கையை மெல்ல, விட மனசே இல்லாமல், கடைசி அணு வரை அவள் விரல்களை இவன் விரல்கள் தீண்டிய பின், கையை எடுத்தான். இருவரும் தங்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு, அதை தள்ளிய வாறே லைட் ஹவுஸ் வரை வந்தனர். அங்கே மௌனமாய் நின்று, என்ன பேசுவதென்றே தெரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்று கொண்டிருந்தனர்.
ஸ்வர்ணா: அப்பறம்??
ஜோடி 1 :
ப்ரியா: அப்பறம்??
சீனு: தேங்க்ஸ், உன்னோட friend intro தந்ததுக்கு. கண்டிப்பா பீச்-கு வரலையா?
ப்ரியா: எங்க அம்மா 8 .30 குள்ள வீட்டுக்கு போகலேனா வெளக்குமாரோட வாசல்ல நிப்பா.
சீனு: ஹே, இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆற? சும்மா தான் கேட்டேன். நான் வீட்டுக்கு கெளம்பறேன். BYE . nice meeting you .
என்று கூறி விட்டு தன் வண்டியை கிளப்பி, சுவாதி-ஐ பற்றி நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினான்.
ப்ரியா-வோ ஆட்டோ எங்கே பிடிப்பது என்று தெரியாமல் தயங்கி தயங்கி, ரோட்டை கிராஸ் பண்ணலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே சற்று தூரம் நடந்தாள்.
ரோஹித்: ஹே ப்ரியா! What a surprise ? இங்க என்ன பண்ற?
திடீரென்று ரோஹித்-ஐ பார்த்த ப்ரியாவிற்கு என்ன பன்னுவதேன்றே தெரியவில்லை. ஆச்சர்யம் ஒரு பக்கம், சந்தோசம் இன்னொரு பக்கம்.
ப்ரியா: ரோஹித்.........! எவ்ளோ நாள் ஆச்சு?? எப்படி இருக்க?? நான் ஜஸ்ட் friends கூட வந்தேன்.
ரோஹித்: ரொம்ப நல்லாஇருக்கேன். நான் இப்ப தான் friends கூட ஊர் சுத்திட்டு வரேன். ரொம்ப நாள் ஆச்சுல நாம மீட் பண்ணி?
ப்ரியா: ஆமாம். உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோசம்.
ரோஹித்: எனக்கும் தான்.
ப்ரியா: அப்பறம்?
ரோஹித்: அப்பறம்?? என்ன?? ஹே! உனக்கு தெரியுமா நான் இப்பலாம் pub -கு போக ஆரம்பிச்சுட்டேன்.
ப்ரியா: wow ! really ?
ரோஹித்: ஆமாம். நெஜம்மா தான். உன்ன நான் ரொம்ப மிஸ் பண்றேன் ப்ரியா.
ப்ரியா : நானும் தான்.
ரோஹித்: பக்கத்துல தான பீச் இருக்கு. உனக்கு problem இல்லேனா, நாம ஏன் அங்க பொய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசக் கூடாது??
ப்ரியா: wow ! ராத்திரி நேரம், கூட்டம் ஜாஸ்தி இருக்காது. நல்ல இருட்டு வேற. கடல் அலை கிட்ட போய் நின்னு கூட பேசலாம். எந்த தொந்தரவும் இருக்காது.
ரோஹித்: உங்க வீட்ல ஒரு problem -உம் வராதே?
ப்ரியா: ச,ச! நான் பதினோரு மணிக்கு போனா கூட யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க. அவ்வளவு நம்பிக்கை என் மேல. சரி போகலாமா??
ரோஹித்: OK ! Hop in !
துள்ளி குதித்து அவன் பைக்-இன் பின்னால் சற்று நெருக்கமாகவே உக்கார்ந்தாள் ப்ரியா.
ப்ரியா: சரி, கெளம்பலாம்.
முடிப்பதற்குள் வண்டி பீச்-ஐ நோக்கி பறந்தது.
ஜோடி 2 :
ஸ்வர்ணா: சரி, கெளம்பலாம்.
ஆனந்த்: கெளம்பலாமா? அதுக்குள்ளயா?
ஸ்வர்ணா: மணி ஆகலையா?
ஆனந்த்: சரி கெளம்பலாம். உன் மாப்பிள்ளைக்கி போன் செஞ்சுட்டு எனக்கு inform பண்ணு. ஆத்துக்கு போனதும் மறக்காம மெசேஜ் அனுப்பு. பாத்து பத்ரமா போ.
இத்தனையும் கூறி, அவன் அவனுடைய பைக்-இல் ஏறி அமர்ந்தான். இருவரும் அவர்களின் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டனர்.
ஒன்றாக " bye " என்று சற்று உரத்த குரலில் கூறி, ஆனந்த் திருவெல்லிக்கேணி-ஐ நோக்கியும், ஸ்வர்ணா சாந்தோம்-ஐ நோக்கியும் வண்டியை விட்டனர். அவர்களின் வண்டி பிரிந்து சென்ற இடைவெளியில் ரோஹித் தனது வண்டியை நுழைத்தான்.
ஒன்றாக " bye " என்று சற்று உரத்த குரலில் கூறி, ஆனந்த் திருவெல்லிக்கேணி-ஐ நோக்கியும், ஸ்வர்ணா சாந்தோம்-ஐ நோக்கியும் வண்டியை விட்டனர். அவர்களின் வண்டி பிரிந்து சென்ற இடைவெளியில் ரோஹித் தனது வண்டியை நுழைத்தான்.
இவ்வாறாக இந்த இரண்டு ஜோடி-களும் ஒரு மணி நேரத்தில் எப்படி போனார்கள் என்பதை நாம் பார்த்தோம். இனி...
ஆறு மாதத்திற்கு பின்பு.
ஸ்வர்ணாவும் ஆனந்தும் தங்கள் திருமண வேலையில் மும்மரமாக இருந்தனர். ஸ்வர்ணாவிர்க்கு பார்த்த மாப்பிள்ளை அவர்களின் நிலையை புரிந்து கொண்டு, ஸ்வர்ணா வீட்டில் அவனே பேசி, அவள் தாயாரையும் வழிக்கு கொண்டு வந்து விட்டான்.
ஆனந்த்-ஒ ஸ்வர்ணா -வின் தங்கைகள் இருவரையும் ஒரு நிலைக்கு கொண்டு வருவதாக வாக்கு குடுத்தான். இப்பொழுது அவர்கள் இருவருமாக சேர்ந்து அவர்கள் வாழ்க்கை என்னும் கட்டடத்தில் ஒவ்வொரு கல்லாக வைத்துக் கொண்டு வருகிறார்கள். கூடிய சீக்கிரம் புது மனை புகு விழா ஆகி விடும்.
நமது சீன் சீனு-ஒ சுவாதி-யுடன் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டான். அமெரிக்கா போவதற்கும் ஒரு வாராக எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டான்.
இறுதியாக ப்ரியா, ரோஹித்-உடன் மீண்டும் விரிசல் விழுந்து இப்பொழுது டாப் அப் செய்ய ஆள் தேடிக் கொண்டு இருக்கிறாள். missed call குடுப்பதாக இருந்தாலும் யோசித்தே செய்கிறாள். அவளுக்கு கிடைத்த அனுபவங்களின் மூலம் இப்பொழுது அவள் boy friends -காண சட்ட திட்டங்களை சற்று கடுமையாகவே வகுத்திருக்கிறாள். ஆகவே எளிதில் யாரும் சிக்குவதில்லை.
இவ்வாறாக இந்தக் கதை நிறைவு பெறுகிறது. மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம். :)