Saturday, December 26, 2009

கோவில் - பிரார்த்தனைக் கூடமா?? பேச்சுக்கான இடமா??

சமீபத்தில் மயிலாப்பூர்-ல் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலுக்கு அதுவும் வீட்டு பக்கத்துலையே இருக்கற கோவிலுக்கு போனேன். அடடா அந்த கொவில்குள்ள நுழைஞ்சாலே ஒரு தனி relaxation தான். Mind ல அவ்ளோ அமைதி எங்க இருந்து தான் வருமோ??? தெரியாது. எல்லா சுவாமியையும் தரிசிச்சுட்டு வந்து அந்த பெரிய காத்தோட்டமான ப்ராஹரத்துல உக்காரும் பொது கிடைக்கற ஆனந்தமே தனி. அவ்வளவு ஆனந்தமும் அமைதியும் இந்த முறையும் அனுபவிக்க தயார் ஆகி ஒரு எதிர்பார்ப்போடு போன வாரம் சென்றேன். ஆனா அங்க நடந்ததே வேற!


கொவில்குள்ள நுழைஞ்சதும் நான் முதல்ல பாத்தது பிள்ளையார இல்ல அவருக்கு பக்கத்துல நின்னு cell phone ல பேசின ஒருத்தர தான் பார்த்தேன். பக்கத்துலையே குருக்கள் கற்பூர தட்டோட நிக்கறார் "கோவிலுக்குள்ள cell phone உபயோகிக்க கூடாதுன்னு இவர் வாய தொறந்து சொன்ன தான் என்ன?? ஒரு வேளை பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் பண்ணின கொழக்கட்டை எல்லாம் அவர் வாய் ல தான் வெச்சுண்டு இருந்தார் போல ??! :P யாருக்கு தெரியும்?!


அடுத்து அப்டியே சுத்திட்டு முருகன் சந்நிதிக்கு வந்தா அங்க ஒரு பொண்ணு பேச ஆரம்பிச்சவ நான் ஆஞ்சநேயர் சந்நிதிய சுத்திட்டு அம்பாள் சந்நிதிகுள்ள போயிட்டும் வந்தாச்சு ஒரு 20 நிமிஷம் இருக்கும் அம்பாள் சந்நிதிக்கு முன்னாடி போட்டு இருக்கற bench மேல ஏறி நின்னுண்டு அவ cell phoneல பேசின பேச்சுக்கு அம்பாளே எழுந்து வந்து ஒரு அடி விட்டு இருக்கணும்! :(


அவ bench மேல நின்னுண்டு அம்பாள பாத்து பாத்து பேசறாளே ஒரு வேளை சிலை கடத்தல் காரியா இருப்பாளோ?? :O :P இல்ல அவ போன் பேசறத்துக்கு தண்டனையா அவளே bench மேல ஏறி நிக்கராளோ??? பாவம் கடவுளையும் இப்படி strict ஆன teacher ஆக்கிட்டீங்களே! :(( அங்க கோவிலோட தலைமை காவல் ஆள் இருந்தாரு அவர் கூட இதை கண்டுக்காம போய்ட்டாரு! பாவம் வெடி குண்டு யாரவது கொண்டு வராங்களானு பாகுரத்துக்கும் லைன் ல ஒழுங்கா போறாங்களான்னு பாக்குரத்துக்குமே அவருக்கு நேரம் சரியாய் இருக்கும் இன்னொரு assistant போடலாம் இந்த மாதிரி வேலைக்கு! :பஅட இதெல்லாம் நவக்ரஹத்த சுத்தினா தொலயும்னு பாத்தேன். என் பொறுமையை ரொம்பவே சொதிச்சுட்டாங்க. நவக்ரஹத்த சுத்திட்டு வந்து உக்காரறேன் எனக்கு கொஞ்சம் பின்னாடி ஒரு uncle அவர் சிரிச்சு சிரிச்சு பேசறதுல சாமி எ பயந்துடும் அப்படி பேசிட்டு இருக்காரு. இந்த பக்கம் ரெண்டு பசங்க வேற அவருக்கு போட்டி போடுற மாதிரியே இருந்துது. அதுல ஒரு ஆள் நான் எங்க அம்மா கிட்ட போலம்பரத கேட்டுட்டு அவராவே செல் போன்எ உள்ள வேச்சுட்டறு. பாவம் நல்லவர். :) அந்த uncle போயாச்சு சரி இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாம்னு பாத்த அந்த uncle இடத்த நிரப்ப இன்னொரு uncle family ஓட வந்துட்டாரு! என்ன கொடும lord சிவா இது?? அப்டின்னு கேட்டுட்டு வெளில கெளம்பிட்டேன்!


பல விஷ்ணு கோவில் மற்றும் சின்ன hindu கோவில்கள்ல இந்த மாதிரி யார் cell phonela பேசினாலும் கோவில்குள்ள பேசாதீங்கன்னு சொல்ற அப்ப இவ்வளவு பெரிய கோவில், பரமரிக்கற ஆட்கள் எவ்ளவோ பேர் இருந்தும் இங்க இந்த அவல நிலைக்கு காரணம் என்ன?? “Non Hindus are not allowed”னு மூலவர் சந்நிதி முன்னாடி கொட்ட கோட்டையா எழுதி போட தெரிஞ்சவங்களுக்கு “cell phone is not allowed in the temple premises” னு எழுதி போட கை வலிக்குது போல. அவங்க தான் எழுதலேன நம்ம அறிவு எங்க போச்சு?? நமக்கு அறிவுங்கறது ஒண்ணு இருக்கறதே நம்மள்ள பல பேருக்கு அடிக்கடி மறந்து போறது தான் அதுக்கு காரணம்.


பிள்ளையாரும் அம்பாளும் conference கால் பண்ண நம்ம கிட்ட ஒரு செல் போன் இல்லையேன்னு தவிக்கற தவிப்பு அவங்க மூஞ்சில நல்லாவே தெரியுது! :ப இருந்திருந்தா?? இன்னிக்கி என்ன அலங்காரம் பண்ணிக்கறது என்ன நெய்வேத்தியம் கேக்கறதுன்னு அவங்களும் family ஓட discuss பண்ணி இருப்பாங்க! :P


ரெண்டு நாள் கழிச்சு என் அம்மா திரும்ப அந்த கோவிலுக்கு போலாமானு கேட்டாங்க நான் "ஆழ விடு சாமி. எனக்கு வீடே கோவில்"னு சொல்லிட்டேன். இந்த ப்ளாக் படிக்கறதுல பாதி பேராவது நிச்சயம் அந்த கோவிலுக்கு போறவங்கள இருப்பீங்க அடுத்த முறை போகும் போதாவது ஒரு நொடி சிந்திச்சு பாருங்க. எதாவது அவசர தகவல் தெரிவிக்கவோ அல்லது கொவில்குள்ள யாரையாவது பாகரதாக இருந்தாலோ பேசலாமே தவிர இப்படி மணி கணக்கா சிரிச்சு பேச கோவில்கள் அனைத்தும் பூங்கா அல்ல.


அடுத்த முறை போகும் பொது உங்க செல் போன் ஐ silent mode ல போட்டுட்டு பொய் சாமிஐ பாருங்க அப்ப கிடைக்கற ஆனந்தமே ஆலாதி தான்! கோவிலுக்கு போற 1 மணி நேரம் கூட செல் போன் பயன் படுத்தாம இருக்க முடியாட்ட, நீங்க எல்லாம் செல் போன்கே கோவில் கட்டி கும்பிடலாம்.

ஏன் கோவிலுக்கு வந்து உங்க timeum மத்தவங்க நிம்மதியும் வீணாக்கறீங்க??


அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் வரை இதை பற்றி யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுக்கிட்டே இருக்காம செயல் படுத்த பாருங்க! :)


மீண்டும் அடுத்த பதிப்பில் சநதிப்போம்! ;)

8 comments:

LK said...

ஹரிணி , நம்ம நாட்ல என்னதான் சட்டம் போட்டாலும் யாரும் பின்பற்ற போறது இல்லை . இதெல்லாம் எல்லாரும் அவங்களா புரிஞ்சு செய்யணும்

அண்ணாமலையான் said...

நல்லா சொன்னீங்க.. ஆனா அதுக்கப்புறம் ஆளே கானோமெ?

Harini Sree said...

@annamalayan naan regular a blog panrathu illa! seekramagave regular a blog panra pazhakatha valathukaren! :)

hayyram said...

///குருக்கள் கற்பூர தட்டோட நிக்கறார் "கோவிலுக்குள்ள cell phone உபயோகிக்க கூடாதுன்னு இவர் வாய தொறந்து சொன்ன தான் என்ன??///

பல இடங்கள்ல குருக்களே மொபைல் பேசுகிறார். கோவில் மற்றும் இறை சிந்தனையின் மீது மரியாதை இருந்தால் ஒழிய இதை தடுக்க முடியாது.

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

தக்குடுபாண்டி said...

// ஒரு வேளை பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் பண்ணின கொழக்கட்டை எல்லாம் அவர் வாய் ல தான் வெச்சுண்டு இருந்தார் போல ??! :P யாருக்கு தெரியும்// ...:) LOL . nalla observation and recollection.

Harini Sree said...

@thakudu varugaikku Nandri :)

Seemachu said...

தொடர்ந்து எழுதுங்க.. நல்லா எழுதறீங்க.

தமிழ்மணம் போன்ற திரட்டியில் இணைச்சீங்கன்னா நல்லா ரீச் இருக்கும்

Harini Sree said...

Nandri Seemachu! Kandipa pathinchu vekkaren! Thodarnthu pathivugal podavum muyarchigal edukkaren! :)