(இந்த கதை என் நண்பர் LK அவர்கள் நடத்தும் இணையதள பத்திரிக்கையில் நான் எழுதியது. இதை எப்பொழுதோ என் ப்ளாக்-இல் போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் கொஞ்சம் சோம்பேறி! :P. பத்திரிக்கையை படிக்க http://vezham.co.cc/ )
நமக்கு இருப்பது இரண்டே கண்கள் தானே! எங்கே இருந்து கோடி கண்கள் வந்தது என்று யோசித்துக் கொண்டே இந்தக் கதையை படித்தால் உங்களுக்கே புரியும் தலைப்பின் அர்த்தம்.
அவள் ஒரு அல் பசினோ-வின் விசிறி. "God Father " படம் பார்த்ததில் இருந்து அல் பசினோ-வின் தீவிர ரசிகை ஆகி விட்டாள். (என்ன டா அவள் என்று கூறி God Father என்றும் கூறுகிறேன் என்று யோசிக்க வேண்டாம், சற்று வித்யாசமான பெண் தான்).தன் சினிமா (நல்ல சினிமா) பைத்திய நண்பனை பிடுங்கி எந்த எந்த அல் பசினோ படம் நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டாள்.
ஒரு சில படங்கள் பார்த்த பின்பு அன்று அவள், "The Scent of women " பார்க்க தீர்மானித்தாள். படத்தில் பசினோ பார்வையற்ற, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது ஏற்கனவே விமர்சனத்தின் மூலம் அறிந்து கொண்டிருந்தாள். படம் ஆரம்பித்தது. எல்லா ராணுவ அதிகாரியையும் போல் இவரும் கோவக்கரராகவும், கண்டிப்பனவராகவும் இருந்தார். இதில் ஒரு வித்யாசமும் இல்லை.
படம் நகர நகர அந்த கதாப்பாத்திரத்தின் தனி குணாதிசியம் வெளி வந்தது. அவர் வாசனையை வைத்தே பெண்கள் உபயோகப் படுத்தும் சோப்பு, ஷாம்பூ, பெர்புமே போன்றவற்றை சரியாக யூகித்து விடுவார். அது மட்டும் அல்ல அவரை கடந்து செல்லும் பெண்ணின் உடல் அமைப்பையும் சரியாகக் கூறி விடுவார். இதை அருவெறுப்பு இல்லாமல் நமக்கு பிடிக்கும் வண்ணத்தில் படத்தில் காமித்து இருப்பார் இயக்குனர். சபாஷ் போடும் படியான காட்சிகள் வரத் தொடங்கின.
இரவு ஒரு மணி வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்தும், தன்னை மறந்து அவள் கைகள் ஒன்றை ஒன்று வேகமாக ஓசை வரும் படி கட்டித் தழுவிக் கொண்டன. (கை தட்டினாள் என்று தான் கூற வந்தேன் :P ). சில இடங்களில் ஆனந்தக் கண்ணீர் அவள் முகத்தைக் கழுவின (தூங்காமல் இருக்க இது போன்ற அவசர வழி என்னிடம் நிறைய உண்டு :P ) . குறிப்பாக அந்த இளைஞனுடன் நடிக்கும் காட்சிகளை மெய்ம் மறந்து பார்த்தாள்.
அட இதெல்லாம் என்ன? பார்வையற்ற பசினோ அந்தப் படத்தில் கார் ஓட்டுவார்! ஆமாம் இது அவளை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. நடிப்பு என்றாலும் அது மிகவும் கடினமான காரியம் தான். பக்கத்தில் இருப்பவர் வழி சொல்ல அவர் பந்தய கார் ஒன்றை ஓட்டிப் பார்ப்பார். இது தான் படத்தின் உச்சக் கட்ட காட்சி. மிக அற்புதமாக இயக்குனர் இதை இயக்கி இருப்பார்.
இந்தக் காட்சி அவள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. "கண் தெரியாமல் கார் ஓட்ட முடியுமா?? எப்படி முடியும்??" நமக்கு கண் தான் இல்லையே தவிர மற்ற புலன்களை வைத்து நம்மால் கண் இருப்பவர் போல சாதரணமாக வாழ்க்கை நடத்த முடியும் என்பதை அவளும் பல முறை கேட்டு இருக்கிறாள் . பல முறை பேருந்திலும் பாத்து இருக்கிறாள். ஆனால் இன்று அந்தப் படத்தின் மூலம் நேரடியாக அனுபவித்தாள். தானே கண் இல்லாமல் ஏதோ சாதனை செய்தது போல் அவளுக்கு அத்தனை ஆனந்தம். நிம்மதியான மற்றும் ஆனந்தமான மனதுடன் அன்று தூங்கினாள்.
மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு, அவளுடைய ப்ராஜெக்ட் ஆபீஸ்-இல் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். மதிய நேரம், கொளுத்தும் வெயில், சுருண்டு விழாத நிலையில், பாதி மனது சாப்பாட்டில் பாதி மனது அவளுடைய ப்ராஜெக்ட்-இல் . இரண்டிற்கும் நல்ல போட்டி இறுதியில் பசியே வென்றது. மதிய உணவிற்கு நேரம் கடந்து விட்டது. சீக்கிரம் சாப்பிடலாம் என்று நடையை விருட்டென விட்டாள்.
எப்பொழுதும் மதிய நேரம் கூட்டமாக இல்லாத கபாலீஸ்வரர் கோவில் அருகே அன்று நல்ல கூட்டம். என்ன இன்று திடீரென்று இவ்வளவு கூட்டம் என்று யோசித்துக் கொண்டே வந்தாள். எதிரே ஒரு கண் இல்லாதவர் அந்த டிராபிக்-இல் தத்தளித்துக் கொண்டு இருந்தார். அவர் யாரிடமோ ஏதோ கேட்பது போல் தோணிற்று. ஆனால் நம் மக்களுக்கு இது மாதிரி விஷயத்தில் ஆயிரம் காது இருந்தாலும் 'கேட்'காது. அவள் முதலில் அவருக்கு "என்ன வேண்டும்" என்று மட்டும் கேட்டு உதவ நினைத்தாள். பின்பு "இல்லை, இல்லை அவர் அருகில் எங்காவது போக வேண்டும் என்றால் அவரை அங்கே அழைத்து சென்று விட்டு விடலாம்" என்ற முடிவிற்கு வந்தாள். பசி வேறு அவள் உயிரை வாங்கியது. "வயிறே சற்று அமைதியாக இரு ஒரு சின்ன வேலை மனசாட்சிக்கு திருப்தி தரும் வேலை அதை முடித்ததும் நேராக சென்று உன்னை திருப்தி படுத்துகிறேன்" என்று அவள் வயிறிடம் கூறினாள்.
இதை எல்லாம் நினைத்துக் கொண்டே அந்த பார்வையற்றவரிடம் அவள் சென்று விட்டாள். அவர் யாரோ அருகில் வருவதை உணர்ந்து "இது கபாலி கோவில் அருகில் தானே?" என்று கேட்டார். அவளும் " ஆமாம்" என்றாள். "நீங்க எங்க போகணும்". அவருக்கு அது சரியாக காதில் விழவில்லை போலும், ஆனாலும் அவர் "கிரி ட்ரேடிங் " என்றார். அவள் அதை உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் அவர் அங்கு தான் செல்ல வேண்டுமா என்று வினவினாள். அதற்க்கு அவர் "இல்லை நான் கிரி ட்ரேடிங் வந்தேன், இப்பொழுது M 1 5 பிடிக்க வேண்டும். நான் மேடவாக்கம் போக வேண்டும் "என்றார்.
உடனே "மேடவாக்கத்தில் இருந்து இவர் இங்கு தனியாக என்ன பண்ணுகிறார்??" என்று அவள் யோசித்தாள். "வாங்க நானே உங்கள பஸ் ஸ்டாப்-ல விட்டுடறேன்" என்று அவர் கையை பிடித்து அழைத்துச் சென்றாள். ஒரு கையில் குச்சியும் ஒரு கையில் அவள் கையையும் பிடித்துக் கொண்ட அவர் மிக வேகமாக நடக்கத் துவங்கினார். பசியில் சுருண்டு இருந்த அவளும் ஓரளவுக்கு வேகத்தைக் கூட்டினாள்.
"பேச்சுக் குடுக்காமல் வந்தால் ஏதோ மாதிரி இருக்கும் ஆதலால் எதாவது பேசலாம். நாம் எதாவது கேள்வி கேட்டால் அவர் பதில் சரியாக கூறவில்லை என்றால்??" இப்படி அவள் யோசித்து முடிப்பதற்குள் அவரே "நீ என்ன மா பண்ற படிக்கறிய வேலை பாக்கறியா ??"னு வினவினார். "நான் MSc IT இறுதி ஆண்டு படிக்கறேன்" என்றாள். "ஓஓஹோ எந்த கல்லூரி-ல படிக்கற?". அவள் கல்லூரி பெயரும் அது எங்கே இருக்கிறது என்றும் அவள் கூறினாள். "இன்னிக்கி காலேஜ் இல்லையா மா?" என்றார். அவளோ"இல்லை இப்ப நாங்க ப்ராஜெக்ட் பண்ணனும் அதுக்காக எதாவது ஒரு கம்பெனி-ல பொய் ஆறு மாசம் வேல பாக்கணும்". அவள் முடிப்பதற்குள் "அப்பா இன்னிக்கி லீவ் ஆ?" என்னவோ அவளை ரொம்ப நாள் தெரிந்தார் போல். அவர் கேட்டதில் அவளுக்கு எந்த எரிச்சலும் வரவில்லை. "இல்லை எங்களுக்கு பாதி நாள் தான் வேலை அப்புறம் வீட்டுக்கு வந்துடலாம்"என்றாள்.
அவளுக்கோ "இவர் கிரி ட்ரேடிங் -இல் என்ன வாங்க வந்திருப்பார்?? அங்கு புத்தகங்கள் தானே கிடைக்கும் ஆனால் இவரால் படிக்க முடியாதே?? " என்றெல்லாம் சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. ஓடி ஓடி களைத்து விட்டது அவள் சிந்தனைக் குதிரை. அவளுக்கு வேலை வைக்காமல் அவரே "நான் கிரி ட்ரேடிங் வந்தேன். ஒலிநாடா வாங்க" என்றார். "அடடா அங்கு ஒலிநாடாவும் கிடைக்கும் என்பது அவளுக்கு சற்று கூட நினைவே இல்லை. ஆனால் இந்த ஒலிநாடா வாங்கவா இவ்வளவு தூரம் அதுவும் பார்வை இல்லாமல் இவர் மதிய நேரத்தில் வந்திருக்கிறார்?? இந்த ஒலிநாடா அங்கே கிடைக்காதா என்ன??".
சும்மா இருக்க முடியுமா?? அதை கேட்டும் விட்டாள் "ஏன் நீங்க அங்கேயே எங்கயாவது இந்த ஒலிநாடா வாங்கி இருக்கலாமே?? இவ்வளவு தூரம் தனியாக வரதுக்கு கஷ்டமா இல்லையா??". அவரோ " இங்க வாங்கினா தான் தரம் நல்லா இருக்கு. கஷ்டத்த பாத்தா முடியுமா?" என்று போட்டாரே ஒரு போடு. அவள் வியப்பில் ஆழ்ந்தாள். ஒரு வினாடி பசினோ கார் ஓட்டிய காட்சி அவள் கண் முன் மின்னலைப் போல் மீண்டும் தோணிற்று. ஏதோ ஒரு புது வித உணர்ச்சி. முதல் முதலில் நடக்கத் துவங்கிய குழந்தையை பார்த்த தாய் போல் ஆனது அவள் உள்ளம். ஆனால் அவள் உணர்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பார்வை தான் இல்லையே தவிர மற்ற எல்லாப் புலன்களும் சேர்ந்து "கோடிக் கண்களை" இவர்களைப் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள், என்று அந்தக் கணமே அவள் முழுமையாக புரிந்து கொண்டாள்.
மேலும் அவர் போஸ்ட் கவர்-கள் விற்பதாக கூறினார். அவரை அவருக்குரிய பேருந்தில் ஏற்றி விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் பொது அவளுக்கு இதுவரை நிழ்கந்தவற்றை அசை போட்டுப் பார்த்தாள். அதில் அவள் வயிறின் பசி நீங்கி அறிவுப் பசியும் நீங்கியது. நம் இரண்டு கண்களைத் தவிர்த்து ஒவ்வொரு நுண் உயிரும் நமக்கு ஒரு கண் போல தான் என்று அவள் புரிந்து கொண்டாள். ஆனால் நாம்??
10 comments:
வேழம் பத்திரிக்கை சுட்டி இங்கே போட்டதற்கு நன்றி :)
கண்ணிருந்தும் குருடர்களாக இங்கு இருப்பவர்களை என்ன சொல்வது. நல்ல கதை..........
this is very interesting...nice article
http://infopediaonlinehere.blogspot.com/
The Book of ELI, apdinu oru padam vanthrukku, denzel washington nadiththa padam, intha padathula avar arumayaaga nadithuruppaar, avarukku parvai theriyathu enbathe padam mudiyum tharuvaayil than namakku theriyum....
ungal blog miga arumai...
@jailane, infopedia and Imay Varugaikku nandri!
@jailaani unmai thaan inge palarum appadi thaan nadanthu kolgiraargal
@Imay
antha padam naan innum paarkkavillai kandipaga poi paarkiren
nice..
Sontha anubhavam pola theriyarthu...
@Balaji First time pola! Varugaikku nandri! ipdi ellam appattama unmaya pesapdaathu! :P
நல்லா இருக்கு... படத்தோட வர்ணனை கொஞ்சம் இழுவை.. அவங்களோட உரையாடல்ல இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கொடுத்திருக்கலாம்.
கதை நன்னா இருந்தது..;)
@Pillayandan Ithu ennoda muthal kathai! kandipa neenga sonna remarks a gnyabagam vechukaren! Nandri
@thakudu Nandri :)
Post a Comment