Thursday, November 4, 2010

அம்மாவைக் காணோம்! - 1

" 9 முதல் 10 .30 முஹூர்த்தம். இன்னும் 10 நிமிஷம் கூட இல்ல ஒன்பது மணி ஆக. இன்னும் அம்மாவும் பொண்ணும் என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? " என்று பதட்டத்துடன் தன் பையனை பார்த்து வினவினார் மாணிக்கம்.
"அம்மா காலை டிப்பனை நிறுத்திக்கலாம்னு சமையல் காரங்க கிட்ட சொல்ல பொய் இருக்காங்க. நித்யா எப்பவும் போல கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாத்து, பாத்து மேக் அப் பண்ணிக்கிட்டு இருக்கா." என்று கூறிக்கொண்டே மணமகள் அறையை நோக்கி நடந்தான் கந்தன்.

டொக்! டொக்! (அவன் மணமகள் அரைக் கதவை தட்டும் சத்தம்)
உள்ளே... "யாரு அது நேரம் காலம் தெரியாம கதவத் தட்டிட்டு??" என்றது ஒரு குரல். "யாரா இருந்தாலும் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணட்டும்" என்றது இன்னொரு குரல். "இந்த ஆம்பளைங்களே இப்படி தான் பொறுமையே கெடயாது" என்று கூறிக் கொண்டே லேசாக ஒரு கண் மட்டும் தெரியும் அளவிற்கு கதவை திறந்தாள் ஒரு பெண்.

"நீ தானா! கந்தா என்ன வேணும் உனக்கு இப்ப?"
"முடிக்க வேண்டிய சடங்கு எல்லாம் அப்படியே இருக்கு, இங்க உங்க மருமக என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? அப்பா பதட்டதோட வெளிய இருக்கார். பண்ணின வரைக்கும் போதும் வெளிய வர சொல்லுங்க."
"வருவா வருவா இன்னும் 10 நிமிஷம். டச் அப் நடக்குது. முடிஞ்சதும் நானே கூட்டிட்டு வரேன்னு உங்க அப்பன் கிட்ட சொல்லு. சும்மா கெடந்து குதிக்காம மேடை மேல போய் நிக்க சொல்லு."

"அது இல்ல அத்த ..."
"சொல்றது காதுல கேட்டுச்சு ல பத்து நிமிஷம் வரலேனா திரும்ப வந்து பாரு டா வெட்டி பயலே" என்று சொல்லி முடிக்கும் முன்பே கதவை சாத்தினாள் கந்தனின் அத்தை.

தலை சொரிந்த வாறே வேறு வழி இல்லாமல் அப்பாவிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். "அக்கா சொல்லுக்கு மறு பேச்சு ஏது?? சரி நீ போய் உங்க அம்மாவை சீக்கிரமா மேடைக்கு வர சொல்லு" என்று கூறி விட்டு மேடையை நோக்கி நடந்தார்.

"மாமா எல்லாரையும் கூட்டிகிட்டு மேடைக்கு போங்க. இங்கயே உக்காந்துட்டு இருக்கணும்னு உங்க பொண்டாட்டி சொன்னாங்களா?? "
"அட நீ வேற ஏன் டா அவள நல்ல மூட்-ல இருக்கும் பொது ஞாபக படுத்தற?? எங்கயாவது உன் பின்னாடி ஒளிஞ்சு இருந்து கேட்டுட போறா.." என்று கூறிய வாறே கந்தனின் பின்னாடி எட்டிப் பார்த்தார் அவன் மாமா.

தன் உறவினர்களை ஒவ்வொருவராக மேடை அருகே செல்லுமாறு கூறி விட்டு, தெரிந்தவர்களிடம் காலை சிற்றுண்டி ஓவரா என உரிமையுடன் விசாரித்தார்.

"கந்தா கந்தா இங்க வா டா" வாசல் அருகே இருந்து சித்தியின் குரல் கேட்டு அந்த திசையை நோக்கி நடந்தான். வழியிலேயே அவன் தெரிந்து கொண்டான் அவன் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். "வாங்க டா வாங்க, நல்லா சீக்கிரம் வந்தீங்க டா. போங்க போய் முதல்ல இட்லி அ பிச்சு போடுங்க அப்புறமா நம்ம கடலைய வெச்சுக்கலாம். எல்லாரும் சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்". என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு dining hall -ஐ நோக்கி நடந்தான்.

உள்ளே நுழைந்தவன் "அம்மா, நீ இங்க தான் இன்னும் இருக்கியா? prime minister -அ கூட பாத்துடலாம் போல, ஆனா காலேல இருந்து உன்ன தான் பாக்கவே முடியல." "என்ன டா பண்றது செல்லப் பொண்ணோட கல்யாணமாச்சே. எந்தக் கொறையும் வந்துடக் கூடாது. உங்க அப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி." என்று சிரிப்பும், கேள்விக்குறியும் கலந்த ஒரு புன்னகை குடுத்தாலள் கல்யாணி.
"இவங்க எல்லாம் என்னோட ஆபீஸ்-ல வேல பாக்கறவங்க மா. இவங்களுக்கும் டிபன் போட சொல்லு."
"அடடே வாங்க வாங்க! என்ன இவ்வளவு லேட்-ஆ வந்து இருக்கீங்க?
சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்."
"கண்டிப்பா மா இது நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி" என்றான் கூட்டத்தில் ஒருவன்.
" மாஸ்டர் இவங்க எல்லாம் என் பையனோட friends இவங்கள நல்லா கவனிச்சுக்கோங்க" என்று அங்கே தலைமை ஆளிடம் கொஞ்சம் அதிகாரம் கலந்த தோரணையில் கூறினாள் கல்யாணி.

"ஆமாம் எங்க டா அந்த தடி பசங்க ராமு, பாபு, குமார் மூணு பெரும்??"என்று கல்யாணி கேட்டு முடிப்பதற்குள், "இதோ வந்தாச்சு மா"என்று கூறிக் கொண்டு பளிச் புன்னகையுடன் dining ஹாலுக்குள் நுழைந்தனர். கையை ஓங்கியவாறே "ஏன் டா தடி பசங்களா இது உங்க தங்கச்சி கல்யாணம்கறது மறந்து போச்சா? எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு கல்யானத்தன்னிக்கி லேட்- அ வரர்தா??"

"சாரி மா கொஞ்சம் தானே லேட் ஆச்சு அதான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டோமே." "சரி சரி வள வளநு பேசாம போய் சாப்டுங்க. டிபன் கடைய இன்னும் பத்து நிமிஷம் extend பண்ண சொல்லி இருக்கேன். சீக்கிரமா போய் சாப்டுட்டு வாங்க"

" டாய் கந்தா இவங்கள எல்லாம் பக்கத்துல இருந்து கவனிச்சுக்க" என்று கூறியவள் பரபரப்புடன் சம்மந்தி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். " நீங்க எல்லாரும் டிபன் சாப்டாச்சு தானே?? இன்னும் பத்து நிமிஷத்துல நான் டிபன் அ நிறுத்த சொல்லலாம்னு இருக்கேன். உங்கள் வீட்டுல யாரவது இன்னும் வரணுமா? சம்மந்தி" என்று கேட்டவளை நோக்கி " காலேல இருந்து இதையே நீங்க மூணாவது தடவ எங்க கிட்ட கேக்கறீங்க. உங்க உபசரிப்ப பாத்து நாங்க எல்லாம் மூக்கு மேல வெரல வெச்சுட்டோம்" என்று சிரித்த படியே சொன்னாள் மாலா.

இப்படி ஒத்துப் போகும் சம்மந்திகளா என்று அங்கிருந்தவர்கள் வயிறு பற்றி எரிவது தெரியாமலே இருவரும் ஒருவர் கை பிடித்து இன்னொருவர் அறையை விட்டு வெளியே வந்து மண மேடையை நோக்கி நடந்தனர்.

"ஆமாம் நித்யா எங்க?? இன்னும் ரெடி ஆகலையா??" "என்னிக்கு உன் பொண்ணு டயத்துக்கு ரெடி ஆகி இருக்கா?? நீயே போய் பாரு" என்றார் மாணிக்கம்.

"வேண்டாம் வேண்டாம் அதோ என் பொண்டாட்டி உங்க பொண்ண கூட்டிகிட்டு வரா" என்றார் மாமா முத்து. அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் அசந்து போகும் வண்ணமும், மாப்பிள்ளை பார்த்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிடும் அளவிற்கும், அன்று அவள் தான் ராணி மற்றவர் யாரும் அவள் அருகில் கூட நிற்க முடியாது என்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தாள் நித்யா.

"இந்த செவப்பு செல உங்க மருமக நிறத்துக்கு மிக எடுப்பு. பாத்தா எடத்துலயே பட்டுன்னு உங்க பையன் விழுந்துடப் போறான்" என்றார் நய்யாண்டியாக உறவினர் சிலர். அதைக் கேட்டு மற்ற மாமியாரை போல் பொறாமை கொள்ளாமல் பெருமிதம் கொண்டாள் மாலா.

ஒரு சில நிமிடங்கள் நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின். கூரைப் புடவையை குடுத்தனர். அவர்களின் சம்பிரதாயப் படி "நூல் சேலையே" அணிய வேண்டும். ஆகவே ஒரு மஞ்சள் நிற காட்டன் புடவையும் அதற்க்கு எதார் போல் ரவிக்கையும் இருந்தது அந்த தட்டில். அதைப் பெற்றுக் கொண்டு அங்கே இருந்து உடை மாற்ற மணமகள் அறைக்கு சென்றாள். கூடவே அம்மா, மாமி மற்றும் சில உறவினர்களும் சென்றனர்.

அய்யர் "பத்து நிமிஷத்துக்குள்ள வர சொல்லுங்க. ரொம்ப லேட் பண்ணிட போறாங்க" என்றார்.
"இவ பண்ணற கூத்து அய்யருக்கு கூட தெரிஞ்சு போச்சு பா" என்றான் கந்தன்.

எல்லாரும் கல கலவென சிரிக்க நித்யா மட்டும் கோபமும் சிரிப்பும் கலந்த உணர்ச்சியை வெளிப் படுத்தினாள். "அண்ணி நான் சமையல் காரங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு வந்துடறேன். நீங்க கொஞ்சம் இவள பாத்துக்கங்க" என்றாள் கல்யாணி.
எல்லா பெண்களும் அறையில் நுழைந்து கதவை சாற்றியதும், சமையலறையை நோக்கி நடந்தாள் கல்யாணி.
"என்ன எல்லாம் ரெடி தானே?? தாலி கட்ட இன்னும் இருவது முப்பது நிமிஷம் தான் இருக்கு. தாலி கட்டின ஒடனே இங்க எலையப் போட்டுடனும் தெரிஞ்சுதா??" என்றாள்.
"எல்லாம் ரெடி ஆ இருக்கு மேடம். நீங்க வேணும்னா ஏதாவது ருசி பாக்கறீங்களா??" என்றார் ஹெட் குக்.
"இல்ல இல்ல எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு இந்தப் பக்கம் எட்டி பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையின் வாசலை அடைந்தாள்.
"இந்த அம்மாவுக்கு இதே பொழப்பா போச்சு இதோட பத்து தடவ வந்துட்டாங்க..." என போலம்பிக்கொண்டே வேலையே முடுக்கி விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்தும் மணப் பெண் வராததால் அவளை சென்று பார்க்க மீண்டும் கந்தன் பலி ஆடாக கேளம்பினான். பத்து பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு அவன் படும் பாடு அவனுக்கு தான் தெரியும். முனகிக் கொண்டே சென்றான்.


சமயலறையில்...
"டேய்! சின்னவனே இங்க ஒரு பை இருக்கு அதுல முந்திரி, காய் கரி, நெய், அரிசி எல்லாம் எடுத்து வெச்சு இருக்கேன். நீயும் பெரியவனும் பின் பக்கமா பொய் வீட்டுல இதக் குடுத்துட்டு வந்துடுங்க டா" என்றார் ஹெட் குக்.
"இதோ வரேன் பா, அங்க அம்மாவுக்கு காபி குடுத்துட்டு வந்துடறேன்" என்று டம்ளர்-இல் காபியை எடுத்துக் கொண்டு குடு குடுவென ஓடினான்.
"எந்த அம்மாக்கு டா இப்ப காபி கொண்டு போற?? காபி நேரமெல்லாம் முடிஞ்சு போச்சே?? இங்க வேற, இருக்கற அதனை பொம்பளைங்களும் ஆட்சி செய்யறாங்க. வாயத் தொறந்துஒண்ணும் பேச முடியல" என்று அலுத்துக் கொண்டார்.

"வந்துட்டேன் பா" பை எங்க?? தாலி கற்றதுக்குள்ள வந்துடணும்" என்றவன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடினான்.
"contract விடாம எல்லாத்தையும் அவங்களே வாங்கிக் குடுத்தா நமக்கு இப்படி தான் நெறைய கஷ்ட்டம். எல்லாம் அந்த ஓரமா இருக்கு. யாரவது ஏதாவது கேட்டா குப்பை அது இதுன்னு சொல்லி சமாளிச்சுக்காங்க. யார் கண்ணுலயும் படாம போங்க டா" என்றார். பெரியவன் வண்டியில் காத்துக் கொண்டிருக்க, சின்னவனும் பையுடன் அவனை அடைந்தான்.

மணமகள் அரை...
"இந்தா இந்த காபி அ குடி எவ்வளவு வாட்டி சொல்றது நித்யா உனக்கு?? அப்பவே கொண்டு வந்து வெச்சாச்சு. தண்ணி மாறி ஆயிடுச்சு. வெறும் வயிரா இருந்தா அபசகுனமா மயக்கம் போட்டு தான் விழனும். நான் சொல்றத நீயாவது கேளு. உங்க மாமா மாறி படுத்தாத " என்றாள் அத்தை.
அந்தக் காபியை வாங்கி மேக் அப் கலையாமல் வாயில் பட்டும் படாமல் ஊற்றிக் கொண்டாள்.

"சரி மேடைக்கு கெளம்பலாம் இல்லேனா உன் அண்ணன் திரும்ப வந்துடுவான்." என்றார் அத்தை. வாசலில் இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு மண மேடைக்கு வந்தான் கந்தன். மணப் பெண்ணும் வர அய்யர் "பொண்ணோட அம்மாவை கூப்டுங்கோ" என்றார்.

"கல்யாணி எங்க?? இந்த நேரம்பாத்து எங்க போனா??" என்றார் மாணிக்கம். "சமையல் அறைக்கு போறேன்னு சொன்னாளே இன்னுமா இங்க வரல?" என்றார் அத்தை.

"இல்லையே அக்கா நாங்க, உங்க கூட இருக்கறதா இல்ல நெனசுக்கிட்டோம்?" என்று மாணிக்கம் கூற. ராமுவை அனுப்பி சமயலறையில் இருக்கும் அம்மாவை அழைத்து வருமாறு கந்தன் கூறினான். 10 -எ வினாடியில் அங்கே அம்மா இல்லை என்று கூறிக் கொண்டே வந்தான் ராமு.

"என்னது அம்மா அங்க இல்லையா? நல்ல பாத்தியா??" "ஆமாம் சமையல் காரர் அப்பவே போய்டதா சொல்றார்."

" சரி திரும்ப ஒரு வாட்டி எல்லா எடத்துலயும் பொய் பாத்துட்டு வாங்க பா" என்றார் சித்தி.

"குமார் நீ பொய் சமையல் கட்டுல பாரு, நீ மாடில பாரு ராமு, நீ மொட்ட மாடில பாரு டா பாபு நான் இங்க பாக்கறேன்" என்று சொன்னான் கந்தன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாய் போய் பார்க்க. கூட்டத்தில் இருகிராளா என்று தேடினார்கள் உறவினர்கள்.

கந்தன் "அம்மா எந்த ரூம்லயும் இல்ல அத்த" "டை கந்தா உங்க அம்மா கிட்சேன்-ல இல்ல டா, அப்பவே போய்டதா அந்த சமையல் காரர் சொல்லறார்." "மாடிலையும் இல்ல. மொட்ட மாடிலையும் இல்ல" என்றது இரண்டு குரல்.

"அப்ப கல்யாணி எங்க தான் போனா??" என்று பதட்டத்துடன் கேட்டாள் அத்தை. வெளியே எங்காவது சென்றிருக்கிராளா என்று பார்த்து விட்டு வரும் படி கந்தனை அனுப்பினாள். கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

என்ன டா இது வந்த உடனே தொடர் கதையோ அல்லது மர்மக் கதையோ எழுத ஆரம்பிச்சுட்டா-நு நேனைக்காரவங்க "wait and watch! :P ". அடுத்த பதிப்பில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது ஹரிணி ஸ்ரீ! ஹரிணி ஸ்ரீ!! ஹரிணி ஸ்ரீ!!!

15 comments:

ஜெய்லானி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//அடுத்த பதிப்பில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது ஹரிணி ஸ்ரீ! ஹரிணி ஸ்ரீ!! ஹரிணி ஸ்ரீ!!!//

திரும்ப எஸ்கேப் ஆகிடாதீங்க ..!! :-))

ஜெய்லானி said...

சூப்பர் கதை தொடருங்கள் ..!!

Paleo God said...

இதோட அடுத்த தீபாவளிக்குத்தான் எழுதுவீங்களா? :))

Harini Nagarajan said...

@ஜெய்லானி தீபாவளி நல் வாழ்த்துக்கள்! :) நன்றி வந்து படிச்சுட்டு கமெண்ட் பண்ணினதுக்கு மற்றும் வாழ்த்துக்களுக்கு. திரும்ப எல்லாம் எஸ்கேப் ஆக மாட்டேன்.

@ஷங்கர் அடுத்த தீபவளி கொஞ்சம் கஷ்ட்டம் ஏன்னா அது என்னோட தல தீபாவளி வேனும்ன அதுக்கடத்து யோசிக்கலாம்! :P

Paleo God said...

ஏன்னா அது என்னோட தல தீபாவளி //

:))

வாழ்த்துகள் சகோதரி. எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!:))

Happy Diwali! :))

Harini Nagarajan said...

நன்றி! நன்றி! கதையா படிச்சுட்டு எப்படி இருக்குனும் ஒரு கமெண்ட் போட்டுடுங்கோ! :D

தக்குடு said...

எப்பதான் இந்த ஜீன் மாசம் வரப்போகர்தோ?? அட ராமா! கல்யாண மண்டப சம்பாஷனைகள் எல்லாம் நன்னா தான் இருக்கு!! அடுத்த போஸ்ட் பொங்கலுக்கா??..:P

Harini Nagarajan said...

Ungalukku ellaam oruthar surusurupaa aanalum pidkaathu somberi a irunthaalum pidikaathu! EKSI?? :P

எல் கே said...

ஒரு வேலை உன் கல்யாணத்துல நடக்கப் போறதா முன்னாடியே எழுதறயா ???

Harini Nagarajan said...

:D yen enga amma paavam! :P

கௌதமன் said...

ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்தப் பதிவை அம்மாவாசை பதிவாக கொண்டால், அடுத்தது ஆடி மாதத்திலா?

Harini Nagarajan said...

@Kg

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்! முதல் தடவ வரீங்கன்னு நெனைக்கறேன் உங்கள போல தொடர்ந்து வரவங்களுக்காகவாவது இனிமே விடாம எழுதறேன்! :) வருகைக்கு நன்றி!

Anonymous said...

வாழ்த்துககளுடன்...
வலைப்பூக்களில்
சாதனை படையுங்கள்

Harini Nagarajan said...

nandri thiru puli! :)