Friday, June 25, 2010

பிடித்த 10 படங்கள் - தமிழ்

இதுவும் ஒரு தொடர் பதிவு தானுங்க! என்ன டா இவ தொடர்ந்து தொடர் பதிவா போடறான்னு யோசிக்கறவங்களுக்கு நான் கூற நினைப்பது, "என்ன தொடர் பதிவு போட அழைச்சவங்க ஏன் டா அழச்சோம்"நு அழுது போலம்பரதுக்குள்ள நான் பதிவு போட நினைக்கறேன். "Better late than never" நு நான் பத்தாம் கிளாஸ்-ல படிச்சத என் வாசகர்களுக்கும் நினைவு படுத்தறேன். இறுதியா எத்தன வாட்டி தொடர் பதிவு தாமதமா போட்டாலும் தொடர்ந்து என்னை அழைக்கும் LK அண்ணா (எவ்ளோ அடி வாங்கினாலும் தாங்கறார் இவர் ரொம்ப நல்லவர்!) அவர்களுக்கு நான் என் நன்றிகளை கூறிக் கொள்கிறேன்! :P

இனி பட்டியலை பாப்போம்! அட நான் படம் பெற சொல்லலங்க! :)

1. முதல்ல நம்ம போலீஸ் ஸ்டோரி, ஜாக்கி சான் நடிச்சது இல்லீங்க நம்ம சூரியா, சரி சரி ஜோதிகா-ஓட சூரியா நடிச்ச "காக்க காக்க". என் வாழ்க்கைலயே ஒரு படத்துக்கு ரெண்டு வாட்டி black -ல டிக்கெட் வாங்கி பாத்தது இந்த படம் தான். என்ன பண்றது அறியா வயசு. இந்த படத்த பத்தி கவிதை எல்லாம் எழுதி வெச்சு இருக்கேன். இப்ப நெனச்சா கூட சிரிப்பா வருது. ஆனாலும் நான் ரொம்பவே ரசிச்சு பாத்த படம். அது மட்டுமா சூரியா மற்றும் ஜோதிகா ஓட விசிறி-ஆ இருந்து இந்தப் படம் பட்டியல்ல இல்லேனா எப்படி??

அந்தப் படத்துல ஜோதிகா "லவ் பண்றேன் truly , madly , deeply ! " அப்டீன்னு ஒரு வசனம் பேசும், அத இன்னி வரைக்கும் யாரு கிட்டயாச்சும் சொல்லனும்னு ட்ரை பண்றேன் ஆனா முடியல.

2. இரண்டாவதா "மொழி" ப்ரித்விராஜ்-உம் , ஜோதிகாவும் பட்டய கெளப்பி இருப்பாங்க. மிக அருமையாக உணர்சிகளை வெளிப் படுத்தி இருப்பார் ஜோதிகா. Family ஓட பொய் பாத்த படம். என்னால மறக்கவே முடியாது.

3. மூணாவதா "அலைபாயுதே" மற்றும் "மௌன ராகம்". இரண்டு வேறு பட்ட காதல் கதை. இந்த இரண்டு படங்களை பார்க்கும் பொழுது "மனசுக்குள்ள மழை பெஞ்ச" மாதிரி ஒரு உணர்ச்சி. மணி ரத்தினம் எடுத்த படங்கள்ல எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்றும் இருக்கு. அது பின்னாடி வரும்.

4. நாலாவதா "ராஜ ராஜ சோழன்". (அடுத்ததா ஒரு காதல் படத்த எதிர் பார்த்த அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கும் :P ). அருமையான செட்டிங்க்ஸ். சிவாஜி கணேசன் நடிச்சு எனக்கு பிடிச்ச படம் இரண்டே இரண்டு தான். இன்னொன்று "கர்ணன்" . அந்த தஞ்சை பெரிய கோவில், சிவ லிங்கம் இது போன்ற செட்டிங்க்ஸ்-இல் பின்னி இருப்பார்கள். கலை நயத்தோடு பார்க்க வேண்டிய படம். வருத்தப் பட வேண்டிய விஷயம் இந்த படம் எதிர் பார்த்த அளவு ஓடவில்லை என்பது தான் (எங்க அப்பா சொன்னது).

5. ஐந்தாவது படம் கொஞ்சம் வித்தியாசமான படம். "மஹா நடிகன்". இந்தப் படத்தை யாரும் என் பட்டியலில் எதிர் பார்த்து இருக்க மாடீர்கள். என்னை பொறுத்த வரை துணிந்து யதார்த்தத்தை பேசும் ஒரே நடிகர் சத்யராஜ். அந்த வகையில் எப்பொழுதும் என் salute அவருக்கு உண்டு. நான் மிகவும் ரசித்து பார்த்த படம். கதை என்று ஒன்றும் பெரிதாய் இல்லை. ஆனால் நக்கல் நய்யாண்டிக்கு பஞ்சமே இல்லாத ஒரு படம்.

6. நான் இந்த போஸ்ட்-ஐ நடு இரவில் எழுதிகிறேன் என்று எல்லாருக்கும் கூறிக்கொள்கிறேன்.

என்ன முழிக்கறீங்களா?? மேல சொன்னதுலயே படம் பெரும் இருக்கு. "நடு இரவில்". இது வீணை S . பாலச்சந்தர் எடுத்த படங்களில் ஒன்று. மிக அற்ப்புதமாக ஒரு தீவிற்கு நடுவில் இருக்கும் வீட்டில் நடக்கும் சம்பவங்களை படம் பிடித்து இருப்பார். "பொம்மை" , "அந்த நாள்" இவை இரண்டுமே அவர் எடுத்த படங்கள் தான். அவர் சுயமாக வீணை வாசிக்க கற்றுக்கொண்டார் என்பது உங்களுக்கான துணுக்கு.

7. ஏழாவதாக "நீலகிரி எக்ஸ்பிரஸ்". அந்த காலத்தில் james bond -கு இணையாக நடித்த தமிழ் நடிகர் "ஜெய ஷங்கர்" நடித்த படம். ஒரு ரயிலில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை மற்றும் கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப் பட்ட படம்.

பி. கு . உங்கள் யாரிடமாவது "CID ஷங்கர்" படம் இருந்தால் லிங்க் அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

8. இந்த இடத்தில் ஒரு இயக்குனரை குறிப்பிட விரும்புகிறேன். A .P . நாகராஜன் படங்கள். ஏற்கனவே அவர் படமான "ராஜா ராஜா சோழன்"ஐ குறிப்பிட்டாகி விட்டது. இதை தவிர்த்து இவரின் நிறைய படங்கள் முக்கிய தகவல் நிறைந்தவையாகவும், கதை, காமெடி, action சரியான அளவுடனும் இருக்கும். இவர் படங்களில் எனக்கு பிடித்த சில...

திருமலை தென்குமரி - திருப்பதி முதல் குமரி முனை வரை யாத்திரை போகும் கதை அமைப்பை கொண்ட படம்.

கண் காட்சி - ஒரு கண் காட்சி-யில் நடக்க கூடும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம்.

வா ராஜா வா - ஏழு வாக்கியங்கள் எதர்ச்சியாக ஒரு சிறுவன் கண்ணில் பட்டு அவை அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு எவ்வாறு ஒத்து போகிறது என்பதை மிக அருமையாக காட்டி இருப்பார்.

இவர் எடுத்த அத்தனை படங்களுமே ரத்தினங்கள். நேரம் கிடைத்தால் இங்கே புரட்டி பாருங்கள்.

9. ஒன்பதாவது இடம் 12b . இந்தப் படம் பெரும்பாலும் யாரையும் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் நடக்கவில்லை என்றால் என்னவாகி இருக்கும் என்ற கதையா சற்று குழப்பத்துடன் முடித்து இருப்பார் இயக்குனர்.

10. பத்தாவதாக கன்னத்தில் முத்தமிட்டால். வேறொன்றும் இந்தப் படத்தை பற்றி சொல்வதற்கு இல்லை. எல்லாருக்கும் தெரிந்ததே.

இருங்க இருங்க எங்க போறீங்க??? இன்னும் சில படங்களுக்கு சிறப்பு இடம் குடுத்து இருக்கிறேன் அதையும் படிச்சுட்டு போங்க.
பாஷா - தலைவர் விசிரியா இருந்துண்டு அவர் படம் இல்லேனா எப்படி??, தெனாலி, எதிர் நீச்சல், பாமா விஜயம் , பூவா தலையா, டும் டும் டும் , திருடா திருடா , சதி லீலாவதி, மின்சார கனவு, வாலி, இந்தியன், அங்காடி தெரு, Rhythm,
கண்ட நாள் முதல், டூயட்.

அப்பாஆஆஆஆட ஒரு வழியா ஒரு படத்து பேரையும் விடாம எழுதி முடிச்சாச்சு. உங்க கஷ்ட்டமும் புரியுது. இதுக்கு மேல மொக்கை போட விரும்பல. என்ன பண்றது?? ஓடாத படமா இருந்தாலும் அது ஏன் ஓடலை-நு VCD -லாவது பாக்கற ஜென்மம் நான். என் கிட்ட பொய் வெறும் பத்து படம்-நா நான் என்னத்த பண்றது??? அதான் சிறப்பு இடம் குடுத்து கௌரவிச்சுட்டேன்.
சரி அடுத்த பதிப்பில் சிந்திப்போம். படம் பாக்க நேரமாச்சு. வரட்டா! :)













Thursday, June 3, 2010

பிடித்த ஐந்து பாடகர் / பாடகியர்

இது ஒரு தொடர் பதிவு. எனது நண்பர் LK அவர்களின் ப்ளாக் பதிவின் தொடராக இந்த பதிவை நான் இடுகிறேன். (LK - இன் ப்ளாக்)

முதலாவதாக, என்னை இந்த தொடர் ப்ளாக் எழுத அழைத்த LK அவர்களுக்கு எனது நன்றி.

இரண்டாவதாக, நான் அவ்வளவாக கர்னாடக சங்கீதம் கேட்டதில்லை. ஆகையால் "கழுதைக்கு தெரிந்த கற்பூர வாசனை" போல் ஏதோ எனக்கு தெரிந்தவர்களில் பிடித்தவர்களை தேர்வு செய்துள்ளேன். அதிகமாக சினிமா பாடகர்களே இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாவதாக எனக்கும் விருது குடுத்த திரு.ஜெய்லானி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


1. திருமதி M . S . சுப்புலட்சுமி அம்மா:

இவர்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இவர்களின் குரலை கேட்டால் நான் எத்தனை டென்ஷன்-இல் இருந்தாலும் அது "சூரியனை கண்ட பனி" போல கரைந்தோடி விடும். நானோ ஒரு கண்ணபிரான் பைத்தியம். "குறை ஒன்றும் இல்லை" கேட்கும் பொழுதெல்லாம் "icing on the cake " போல இருக்கும். சில சமயம் என்னை மறந்து என் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டுவதும் உண்டு.

2. திரு. உன்னி கிருஷ்ணன்:

கர்னாடக சங்கீதமாகட்டும், சினிமா பாடல்களாகட்டும் மனுஷன் தூள் கெளப்புவார். என்னம்மா குரல் இழையும். ஒரு சில சினிமா பாடல்கள் எல்லாம் அவர் தான் பாடி இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும் அத்தனை அருமையாக இருக்கும்.

3 . திரு மனோ / திரு யேசுதாஸ் :
இந்த இடத்திற்கு தான் கடும் போட்டி. இறுதியாக நான் தேர்வு செய்வது இவர்கள் இரண்டு பேரையும் தான். யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களாகட்டும் அல்லது அவர் பாடிய ராகவேந்திரர் துதி ஆகட்டும் ஒரு ஹிந்து-வால் கூட இவ்வாறு மனமுருகி பாட இயலாது. நிஜமாகவே இவருக்கு என் பாணியில் நான் கூற விரும்புவது "hats off ".

திரு மனோ அவர்களின் "நீ ஒரு காதல் சங்கீதம்" நான் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒன்று. அவர் கசல் பாடல்களும் பாடுவார். சுவாமி பாடல்களும் பாடி உள்ளார். இவரைப் பற்றி கூறும் பொழுது நான் என் மாமாவைப் பற்றிக் கண்டிப்பாக கூறியே ஆகா வேண்டும். எப்ப இவர் பாட்ட கேட்டாலும் "இவன் என்ன டி பாடறான்? நான் பாடறேன் பாரு அப்டீன்னு பாட ஆரம்பிச்சுடுவார்" கேக்கறதுக்கு தான் நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம். அவருடைய செல்ல பெயர் மனோ என்பதற்காக எங்களுக்கு இந்த தண்டனையை தருவார்.

4 . திரு கார்த்திக்:
கார்த்திக் என்ற பெயரின் மேல் ஒரு காலத்தில் பயிதியமாகவே இருந்தேன். அது ஒரு அலைபாயுதே காலம். ஆனால் நெஜமாகவே கார்த்திக் என்ற பெயரில் உள்ளவரின் குரலுக்கு இப்பொழுது பைத்தியமாக இருக்கிறேன். இந்த போஸ்ட் எழுதும் பொழுது கூட "உசுரே போகுதே" பாடலைக் கேட்டுக் கொண்டு தான் எழுதுகிறேன். ஆகையால் பிழை இருந்தால் அதற்க்கு நான் காரணம் அல்ல முழுக்க முழுக்க கார்த்திக்-எ காரணம் என்று கூறிக் கொள்கிறேன்.

5 . திருமதி ஜானகி:
அடக்கம் ஆகட்டும் , பாட்டில் ஆரவாரம் ஆகட்டும் இவர்களுக்கு இணை இவர்கள் தான். "கொஞ்சும் குரல்" இது ஒன்றே போதும் இவரைப் பற்றி நான் வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை.

ஐந்து என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. இவர்களை தவிரு எனக்கு பிடித்த பாடகர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சிலர் திரு டி. ஆர். மகாலிங்கம், திரு பி. பி. ஸ்ரீநிவாஸ், திருமதி வரலக்ஷ்மி, திரு ஹரிஹரன், திரு ஷங்கர் மகாதேவன், இப்படி பலரின் பெயரை அடுக்கிக் கொண்டே போவேன். ஆகையால் இதோடு நான் என் பட்டியலை நிறுத்திக் கொள்கிறேன்.

இது ஒரு தொடர் பதிவு ஆகையால் என் ப்ளாக்-ஐ தொடரும் அல்லது படிக்கும் யார் வேண்டுமானாலும் இதை தொடர்ந்து எழுதலாம். நான் அனைவருக்கும் அழைப்பு விடுகிறேன்.
பி. கு: எல். கே. அவர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்து ஒரு மாதமே ஆகப் போகிறது என்னுடைய கணினி-யில் அவ்வப்பொழுது வரும் பிரச்சனையின் காரணமாக என்னால் தொடர்ந்து பதிவுகளை போட முடியவில்லை. ஆகவே வாசகர்கள் அனைவரும் இந்த தாமதத்தை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம் :)