Thursday, June 3, 2010

பிடித்த ஐந்து பாடகர் / பாடகியர்

இது ஒரு தொடர் பதிவு. எனது நண்பர் LK அவர்களின் ப்ளாக் பதிவின் தொடராக இந்த பதிவை நான் இடுகிறேன். (LK - இன் ப்ளாக்)

முதலாவதாக, என்னை இந்த தொடர் ப்ளாக் எழுத அழைத்த LK அவர்களுக்கு எனது நன்றி.

இரண்டாவதாக, நான் அவ்வளவாக கர்னாடக சங்கீதம் கேட்டதில்லை. ஆகையால் "கழுதைக்கு தெரிந்த கற்பூர வாசனை" போல் ஏதோ எனக்கு தெரிந்தவர்களில் பிடித்தவர்களை தேர்வு செய்துள்ளேன். அதிகமாக சினிமா பாடகர்களே இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாவதாக எனக்கும் விருது குடுத்த திரு.ஜெய்லானி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


1. திருமதி M . S . சுப்புலட்சுமி அம்மா:

இவர்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இவர்களின் குரலை கேட்டால் நான் எத்தனை டென்ஷன்-இல் இருந்தாலும் அது "சூரியனை கண்ட பனி" போல கரைந்தோடி விடும். நானோ ஒரு கண்ணபிரான் பைத்தியம். "குறை ஒன்றும் இல்லை" கேட்கும் பொழுதெல்லாம் "icing on the cake " போல இருக்கும். சில சமயம் என்னை மறந்து என் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டுவதும் உண்டு.

2. திரு. உன்னி கிருஷ்ணன்:

கர்னாடக சங்கீதமாகட்டும், சினிமா பாடல்களாகட்டும் மனுஷன் தூள் கெளப்புவார். என்னம்மா குரல் இழையும். ஒரு சில சினிமா பாடல்கள் எல்லாம் அவர் தான் பாடி இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும் அத்தனை அருமையாக இருக்கும்.

3 . திரு மனோ / திரு யேசுதாஸ் :
இந்த இடத்திற்கு தான் கடும் போட்டி. இறுதியாக நான் தேர்வு செய்வது இவர்கள் இரண்டு பேரையும் தான். யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களாகட்டும் அல்லது அவர் பாடிய ராகவேந்திரர் துதி ஆகட்டும் ஒரு ஹிந்து-வால் கூட இவ்வாறு மனமுருகி பாட இயலாது. நிஜமாகவே இவருக்கு என் பாணியில் நான் கூற விரும்புவது "hats off ".

திரு மனோ அவர்களின் "நீ ஒரு காதல் சங்கீதம்" நான் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒன்று. அவர் கசல் பாடல்களும் பாடுவார். சுவாமி பாடல்களும் பாடி உள்ளார். இவரைப் பற்றி கூறும் பொழுது நான் என் மாமாவைப் பற்றிக் கண்டிப்பாக கூறியே ஆகா வேண்டும். எப்ப இவர் பாட்ட கேட்டாலும் "இவன் என்ன டி பாடறான்? நான் பாடறேன் பாரு அப்டீன்னு பாட ஆரம்பிச்சுடுவார்" கேக்கறதுக்கு தான் நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம். அவருடைய செல்ல பெயர் மனோ என்பதற்காக எங்களுக்கு இந்த தண்டனையை தருவார்.

4 . திரு கார்த்திக்:
கார்த்திக் என்ற பெயரின் மேல் ஒரு காலத்தில் பயிதியமாகவே இருந்தேன். அது ஒரு அலைபாயுதே காலம். ஆனால் நெஜமாகவே கார்த்திக் என்ற பெயரில் உள்ளவரின் குரலுக்கு இப்பொழுது பைத்தியமாக இருக்கிறேன். இந்த போஸ்ட் எழுதும் பொழுது கூட "உசுரே போகுதே" பாடலைக் கேட்டுக் கொண்டு தான் எழுதுகிறேன். ஆகையால் பிழை இருந்தால் அதற்க்கு நான் காரணம் அல்ல முழுக்க முழுக்க கார்த்திக்-எ காரணம் என்று கூறிக் கொள்கிறேன்.

5 . திருமதி ஜானகி:
அடக்கம் ஆகட்டும் , பாட்டில் ஆரவாரம் ஆகட்டும் இவர்களுக்கு இணை இவர்கள் தான். "கொஞ்சும் குரல்" இது ஒன்றே போதும் இவரைப் பற்றி நான் வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை.

ஐந்து என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. இவர்களை தவிரு எனக்கு பிடித்த பாடகர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சிலர் திரு டி. ஆர். மகாலிங்கம், திரு பி. பி. ஸ்ரீநிவாஸ், திருமதி வரலக்ஷ்மி, திரு ஹரிஹரன், திரு ஷங்கர் மகாதேவன், இப்படி பலரின் பெயரை அடுக்கிக் கொண்டே போவேன். ஆகையால் இதோடு நான் என் பட்டியலை நிறுத்திக் கொள்கிறேன்.

இது ஒரு தொடர் பதிவு ஆகையால் என் ப்ளாக்-ஐ தொடரும் அல்லது படிக்கும் யார் வேண்டுமானாலும் இதை தொடர்ந்து எழுதலாம். நான் அனைவருக்கும் அழைப்பு விடுகிறேன்.
பி. கு: எல். கே. அவர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்து ஒரு மாதமே ஆகப் போகிறது என்னுடைய கணினி-யில் அவ்வப்பொழுது வரும் பிரச்சனையின் காரணமாக என்னால் தொடர்ந்து பதிவுகளை போட முடியவில்லை. ஆகவே வாசகர்கள் அனைவரும் இந்த தாமதத்தை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம் :)

9 comments:

LK said...

இந்தப் பதிவப் போட்டதுக்கு நன்றி. நல்ல தேர்வுகள்.

யாதவன் said...

"கழுதைக்கு தெரிந்த கற்பூர வாசனை"
அருமை

ஜெய்லானி said...

நல்ல ரசனையான தேர்வு....!!

தக்குடுபாண்டி said...

nice post, oru valiyaa pootaachu poolarukku??..:PP

அப்பாவி தங்கமணி said...

Nice selections Harini...
நானும் கொஞ்சம் கண்ணபிரான் பைத்தியம் தான்... அடிக்கடி பாடி ரங்க்ஸ்ஐ கொடுமை படுத்துவது என்னோட hobby ... ஹா ஹா ஹா....

Mano is an excellent singer... I'm his big fan too...

எல்லாம் சரி.... என்னோட பேரு எங்க லிஸ்ட்ல காணோம்.... மறந்துட்டியா.... ஒகே ஒகே.... எல்லாருக்கும் தெரிஞ்சுது தானே... ஹா அஹ ஹா

Harini Sree said...

@appavi akka (akkanu koopdalamono??) ungala poi intha list-la sethu ungala naan kevala padutha virumbala! :P

அப்பாவி தங்கமணி said...

தாராளமா நீ அக்கானு கூப்பிடலாம்... நீ தக்குடுவ விட சின்ன பொண்ணுன்னு எனக்கு தெரியும் (நோ டென்ஷன் தக்குடு...) அட அட அட... என்ன ஒரு பெரிய மனசும்மா உனக்கு? என்னை எங்கயோ கொண்டு போயிட்டா போ....

பத்மநாபன் said...

எல்.கே வழியாக அறிய பெற்றேன்.. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

பாடகர்கள் தேர்வு அருமை..எம்.எஸ் அம்மாவின் குறை ஒன்றுமில்லை கேட்டுகொண்டே இருக்கலாம்.
உன்னி...என்னவளே..அடி என்னவளே பாடலில் இழைந்து அனைவரையும் ரசிக்க வைப்பார்.
யேசுதாஸ்..செந்தாழாம் பூவில் ..காதில் ஒலித்துக்கொண்டெ இருக்கும்...

மனோ..மணியே..மணிக்குயிலே ன்னு
மெல்லிசை அவர்க்கு நன்றாகவே வரும்.

கார்த்திக்...சுட்டியாக மேடைகளிலும் அசத்துவார்.

ஜானகியம்மாவிற்க்கு என் தேர்வில் முதல் இடம்.

ரசிப்பான பதிவு...

Harini Sree said...

Nandri Padhmanaban! :)