Friday, June 25, 2010

பிடித்த 10 படங்கள் - தமிழ்

இதுவும் ஒரு தொடர் பதிவு தானுங்க! என்ன டா இவ தொடர்ந்து தொடர் பதிவா போடறான்னு யோசிக்கறவங்களுக்கு நான் கூற நினைப்பது, "என்ன தொடர் பதிவு போட அழைச்சவங்க ஏன் டா அழச்சோம்"நு அழுது போலம்பரதுக்குள்ள நான் பதிவு போட நினைக்கறேன். "Better late than never" நு நான் பத்தாம் கிளாஸ்-ல படிச்சத என் வாசகர்களுக்கும் நினைவு படுத்தறேன். இறுதியா எத்தன வாட்டி தொடர் பதிவு தாமதமா போட்டாலும் தொடர்ந்து என்னை அழைக்கும் LK அண்ணா (எவ்ளோ அடி வாங்கினாலும் தாங்கறார் இவர் ரொம்ப நல்லவர்!) அவர்களுக்கு நான் என் நன்றிகளை கூறிக் கொள்கிறேன்! :P

இனி பட்டியலை பாப்போம்! அட நான் படம் பெற சொல்லலங்க! :)

1. முதல்ல நம்ம போலீஸ் ஸ்டோரி, ஜாக்கி சான் நடிச்சது இல்லீங்க நம்ம சூரியா, சரி சரி ஜோதிகா-ஓட சூரியா நடிச்ச "காக்க காக்க". என் வாழ்க்கைலயே ஒரு படத்துக்கு ரெண்டு வாட்டி black -ல டிக்கெட் வாங்கி பாத்தது இந்த படம் தான். என்ன பண்றது அறியா வயசு. இந்த படத்த பத்தி கவிதை எல்லாம் எழுதி வெச்சு இருக்கேன். இப்ப நெனச்சா கூட சிரிப்பா வருது. ஆனாலும் நான் ரொம்பவே ரசிச்சு பாத்த படம். அது மட்டுமா சூரியா மற்றும் ஜோதிகா ஓட விசிறி-ஆ இருந்து இந்தப் படம் பட்டியல்ல இல்லேனா எப்படி??

அந்தப் படத்துல ஜோதிகா "லவ் பண்றேன் truly , madly , deeply ! " அப்டீன்னு ஒரு வசனம் பேசும், அத இன்னி வரைக்கும் யாரு கிட்டயாச்சும் சொல்லனும்னு ட்ரை பண்றேன் ஆனா முடியல.

2. இரண்டாவதா "மொழி" ப்ரித்விராஜ்-உம் , ஜோதிகாவும் பட்டய கெளப்பி இருப்பாங்க. மிக அருமையாக உணர்சிகளை வெளிப் படுத்தி இருப்பார் ஜோதிகா. Family ஓட பொய் பாத்த படம். என்னால மறக்கவே முடியாது.

3. மூணாவதா "அலைபாயுதே" மற்றும் "மௌன ராகம்". இரண்டு வேறு பட்ட காதல் கதை. இந்த இரண்டு படங்களை பார்க்கும் பொழுது "மனசுக்குள்ள மழை பெஞ்ச" மாதிரி ஒரு உணர்ச்சி. மணி ரத்தினம் எடுத்த படங்கள்ல எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்றும் இருக்கு. அது பின்னாடி வரும்.

4. நாலாவதா "ராஜ ராஜ சோழன்". (அடுத்ததா ஒரு காதல் படத்த எதிர் பார்த்த அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கும் :P ). அருமையான செட்டிங்க்ஸ். சிவாஜி கணேசன் நடிச்சு எனக்கு பிடிச்ச படம் இரண்டே இரண்டு தான். இன்னொன்று "கர்ணன்" . அந்த தஞ்சை பெரிய கோவில், சிவ லிங்கம் இது போன்ற செட்டிங்க்ஸ்-இல் பின்னி இருப்பார்கள். கலை நயத்தோடு பார்க்க வேண்டிய படம். வருத்தப் பட வேண்டிய விஷயம் இந்த படம் எதிர் பார்த்த அளவு ஓடவில்லை என்பது தான் (எங்க அப்பா சொன்னது).

5. ஐந்தாவது படம் கொஞ்சம் வித்தியாசமான படம். "மஹா நடிகன்". இந்தப் படத்தை யாரும் என் பட்டியலில் எதிர் பார்த்து இருக்க மாடீர்கள். என்னை பொறுத்த வரை துணிந்து யதார்த்தத்தை பேசும் ஒரே நடிகர் சத்யராஜ். அந்த வகையில் எப்பொழுதும் என் salute அவருக்கு உண்டு. நான் மிகவும் ரசித்து பார்த்த படம். கதை என்று ஒன்றும் பெரிதாய் இல்லை. ஆனால் நக்கல் நய்யாண்டிக்கு பஞ்சமே இல்லாத ஒரு படம்.

6. நான் இந்த போஸ்ட்-ஐ நடு இரவில் எழுதிகிறேன் என்று எல்லாருக்கும் கூறிக்கொள்கிறேன்.

என்ன முழிக்கறீங்களா?? மேல சொன்னதுலயே படம் பெரும் இருக்கு. "நடு இரவில்". இது வீணை S . பாலச்சந்தர் எடுத்த படங்களில் ஒன்று. மிக அற்ப்புதமாக ஒரு தீவிற்கு நடுவில் இருக்கும் வீட்டில் நடக்கும் சம்பவங்களை படம் பிடித்து இருப்பார். "பொம்மை" , "அந்த நாள்" இவை இரண்டுமே அவர் எடுத்த படங்கள் தான். அவர் சுயமாக வீணை வாசிக்க கற்றுக்கொண்டார் என்பது உங்களுக்கான துணுக்கு.

7. ஏழாவதாக "நீலகிரி எக்ஸ்பிரஸ்". அந்த காலத்தில் james bond -கு இணையாக நடித்த தமிழ் நடிகர் "ஜெய ஷங்கர்" நடித்த படம். ஒரு ரயிலில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை மற்றும் கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப் பட்ட படம்.

பி. கு . உங்கள் யாரிடமாவது "CID ஷங்கர்" படம் இருந்தால் லிங்க் அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

8. இந்த இடத்தில் ஒரு இயக்குனரை குறிப்பிட விரும்புகிறேன். A .P . நாகராஜன் படங்கள். ஏற்கனவே அவர் படமான "ராஜா ராஜா சோழன்"ஐ குறிப்பிட்டாகி விட்டது. இதை தவிர்த்து இவரின் நிறைய படங்கள் முக்கிய தகவல் நிறைந்தவையாகவும், கதை, காமெடி, action சரியான அளவுடனும் இருக்கும். இவர் படங்களில் எனக்கு பிடித்த சில...

திருமலை தென்குமரி - திருப்பதி முதல் குமரி முனை வரை யாத்திரை போகும் கதை அமைப்பை கொண்ட படம்.

கண் காட்சி - ஒரு கண் காட்சி-யில் நடக்க கூடும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம்.

வா ராஜா வா - ஏழு வாக்கியங்கள் எதர்ச்சியாக ஒரு சிறுவன் கண்ணில் பட்டு அவை அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு எவ்வாறு ஒத்து போகிறது என்பதை மிக அருமையாக காட்டி இருப்பார்.

இவர் எடுத்த அத்தனை படங்களுமே ரத்தினங்கள். நேரம் கிடைத்தால் இங்கே புரட்டி பாருங்கள்.

9. ஒன்பதாவது இடம் 12b . இந்தப் படம் பெரும்பாலும் யாரையும் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் நடக்கவில்லை என்றால் என்னவாகி இருக்கும் என்ற கதையா சற்று குழப்பத்துடன் முடித்து இருப்பார் இயக்குனர்.

10. பத்தாவதாக கன்னத்தில் முத்தமிட்டால். வேறொன்றும் இந்தப் படத்தை பற்றி சொல்வதற்கு இல்லை. எல்லாருக்கும் தெரிந்ததே.

இருங்க இருங்க எங்க போறீங்க??? இன்னும் சில படங்களுக்கு சிறப்பு இடம் குடுத்து இருக்கிறேன் அதையும் படிச்சுட்டு போங்க.
பாஷா - தலைவர் விசிரியா இருந்துண்டு அவர் படம் இல்லேனா எப்படி??, தெனாலி, எதிர் நீச்சல், பாமா விஜயம் , பூவா தலையா, டும் டும் டும் , திருடா திருடா , சதி லீலாவதி, மின்சார கனவு, வாலி, இந்தியன், அங்காடி தெரு, Rhythm,
கண்ட நாள் முதல், டூயட்.

அப்பாஆஆஆஆட ஒரு வழியா ஒரு படத்து பேரையும் விடாம எழுதி முடிச்சாச்சு. உங்க கஷ்ட்டமும் புரியுது. இதுக்கு மேல மொக்கை போட விரும்பல. என்ன பண்றது?? ஓடாத படமா இருந்தாலும் அது ஏன் ஓடலை-நு VCD -லாவது பாக்கற ஜென்மம் நான். என் கிட்ட பொய் வெறும் பத்து படம்-நா நான் என்னத்த பண்றது??? அதான் சிறப்பு இடம் குடுத்து கௌரவிச்சுட்டேன்.
சரி அடுத்த பதிப்பில் சிந்திப்போம். படம் பாக்க நேரமாச்சு. வரட்டா! :)

21 comments:

rk guru said...

yella padamum super....

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

LK said...

thanks for posting atlastttttttttttttttt

Harini Sree said...

varugaikkum karuththukkum nandri thiru guru!

@LK anna :P ok ok cool cool!

@basheer ungal link migavum ubayogamaaga irunthathu. antha comment-il link irupathaal athai veliyidavillai. nandri :)

ஜெய்லானி said...

சில படங்கள் பார்த்தது இல்லை. கிடைத்தால் பார்க்க முயற்சிக்கிறேன். :-))

தக்குடுபாண்டி said...

//ஓடாத படமா இருந்தாலும் அது ஏன் ஓடலை-நு VCD -லாவது பாக்கற ஜென்மம் நான்// ROFTL...:)

Riyas said...

nice post... continue

cp senthilkumar said...

லேட்டஸ்ட்டும் இருக்கு,பழைய படமும் இருக்கு.உங்களை வகைப்படுத்தவே முடியலையே,any way congrats

Harini Sree said...

@jailaani Kandippaa enna nambi paarunga. intha padangalukku naan guarantee! :P

@Riyas Nandri :)

@Senthil Kumar varugaikkum karuthukkum nandri. konjam vagai padutharathu kashtam thaan :)

Matangi Mawley said...

romba nalla list! esp.. s.balachander padangala mention panni iruppathu- kudos! antha naal/bommai enakku mikavum pidiththa padangalil varum padangal!
maha nadigan cinemavum- mikavum yathaartham niraintha ondru.. pidiththa listil naan serthukkollum padam illai endraalum naan rasitha padam athu!

good!

Harini Sree said...

@Mathangi Varugaikkum karuththukkum nandri! intha listla sila padangal athigama yaarum paathu irukka maataanga. neenga paathu irukeenganu nenaikkum pothu romba santhoshama irukku :) Thodarnthu vaanga

மங்குனி அமைச்சர் said...

அய்யய்யே இது ரொம்ப பழைய தொடர் பதிவு ,, நீங்க உங்க சொந்த பதிவ போடுங்க

Harini Sree said...

@manguni amaichar pazhasu thaan aana enakku azhaippu pona maasam thaan vanthuthu! :) ithu mattum yenna copy adicha pathiva?? ellaam sontha pathivu thaan! :P

அப்பாவி தங்கமணி said...

//Better late than never" நு நான் பத்தாம் கிளாஸ்-ல படிச்சத என் வாசகர்களுக்கும் நினைவு படுத்தறேன்//

ஐ... நீ பத்தாம் கிளாஸ் படிச்சியா... ஒகே ஒகே நோ டென்ஷன்... சும்மா சும்மா....

அப்பாவி தங்கமணி said...

//அத இன்னி வரைக்கும் யாரு கிட்டயாச்சும் சொல்லனும்னு ட்ரை பண்றேன் ஆனா முடியல.//

அப்பாடா ஒரு அப்பாவி மனுஷன் இன்னும் நிம்மதியா இருக்கார்... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

//சற்று குழப்பத்துடன் முடித்து இருப்பார் இயக்குனர்.//

ஓ... உங்களுக்கு குழப்பினாதான் பிடிக்குமா... சூப்பர் ... இனிமே நெறைய குழப்பறேன் இருங்க...

அப்பாவி தங்கமணி said...

அருமையான தேர்வுகள்... சூப்பர்... பெரும்பாலும் எல்லாமும் எனக்கும் பிடித்தவை தான்... சூப்பர்...

Harini Sree said...

@அப்பாவி அக்கா
உங்களுக்கு நான் எவ்ளோ சப்போர்ட் பண்ணி உங்கள பெரிய பாடகினு எல்லாம் சொன்னேன் என்ன பாத்து பத்தாம் கிளாஸ் படிச்சு இருக்கியான்னு கேட்டுடீங்களே?? இது ஞாயமா?? நானும் உங்கள மாறி அப்பாவியோ அப்பாவி அப்ப எனக்கு வரப் போறவர் அடப் பாவி ஆ தான் இருப்பார். கண்டிப்பா நெறைய கொழப்புங்க. வாங்க போங்க மட்டும் வேண்டாம்.
இறுதியாக கருத்துக்களுக்கு நன்றி! :)

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு:)!

அப்பாவி தங்கமணி said...

மேடம், 15 days க்கு மேல ஆச்சு... என்ன போஸ்ட்ஏ காணோம்? பிஸி பிஸிஆ?

Harini Sree said...

@ramalakshmi muthal varugai pola thodarnthu vaanga.

@appavi akka system a nethu thaan ready panninen konjam trouble kuduthuthu. oorukku poren so vanthathum post mazhaya potu thalliduvom! :D

Anonymous said...

நன்று