Monday, November 15, 2010

அம்மாவைக் காணோம்! - 2

அம்மாவைக் காணோம்! - 1 (இங்கே)


கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

"என்னது கல்யாணியைக் காணமா??" எனப் பதட்டத்துடன் மாணிக்கம் கூற. உடனே அவன் கையைப் பிடித்து உணர்ச்சிவசப் படாதே என்பது போல் சமிக்யை செய்தாள் அத்தை அபிராமி.

அய்யரின் காதில் மெல்ல "மணப் பெண்ணின் அம்மாவைக் காணோம்" என்றாள் அபிராமி. "என்னது பொண்ணோட அம்மாவைக் காணமா??! " என்று ஒரு அதிர்ச்சியுடன் வாயை பிளந்தார் அய்யர்.

" பதட்ட படாதீங்க. இங்கே தான் எங்கயாவது இருப்பாங்க எங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் தாங்க, தேடி பாக்கறோம். அது வரைக்கும் சமாளிக்க ஏதாவது பூஜை பண்ணிட்டு இருங்க" என்று கூறியவள், அவள் கணவனையும், நித்யாவின் சித்தப்பாவையும் மணவரை அருகே நிற்க வைத்து விட்டு, பதட்டம் இல்லாமல் இருக்கும் படி கூறினாள். மேலும் இரண்டு இரண்டு பேராக கீழே இறங்கி மணமகள் அறைக்கு வருமாறு கூறி விட்டு நித்யாவின் சித்தியுடன் கீழே சிரித்த வாறு இறங்கினாள்.

கீழே இறங்கி மணமகள் அறைக்கு போவதற்குள் "உங்க வீட்டுல நடக்கற முதல் கல்யாணம் எல்லாரும் ரொம்ப ஆரவாரமா இருக்கீங்க போல??" "இப்படி எல்லாரையும் சந்தோஷமா பாக்கறதே எங்க எல்லாருக்கும் நிம்மதியா இருக்கு" "ஊருக்கு உதாரணமாய் ஒற்றுமையாய் வாழும் குடும்பம்" என்றெல்லாம் போகிற வழியில், வழி மறித்து பேச்சுக் குடுக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒருவர் "எங்க கல்யாணிய காணம்?? இப்பவாவது வந்து மாணவரில நிக்க கூடாதா??" என்றார் என்ன சொல்வதென்று அறியாமல் முகத்தில் புன்னகையுடன் "சமையல் காரங்க ஏதோ கேட்டாங்கனு எடுத்துக் குடுக்க பொய் இருக்கா நாங்க பொய் கூட்டிட்டு வரோம்" என்று இருவரும் மழுப்பினார். இதே தொல்லை கந்தனுக்கும், அவனுடைய மற்ற உறவினர்களுக்கும் இருந்தது.

மற்றவர்கள் வருவதற்குள் நடந்தவற்றை மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தாள் அபிராமி. எல்லாரும் வந்தாகி விட்டது. கந்தனையும் அவன் நண்பன் ராமு மற்றும் அபிராமியின் மகன் மூன்று பேரையும் கீழே ஒரு முறை தேடிப் பார்க்க சொன்னாள்.

நான்கு பேரை முதல் மாடிக்கும், மூன்று பேரை மொட்டை மாடிக்கும் அனுப்பினாள்.

மணமகள் அறையிலேயே காத்து இருப்பதாகவும். எல்லாரும் சரியாக ஐந்து நிமிடத்தில் இங்கு வர வேண்டும் என்றும் கூறினாள். மறக்காமல் கல்யாணியின் கைப் பேசியில் அழைத்துப் பார் எனக் கந்தனிடம் கூறினாள்.

எல்லாரும் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல் வேகமாகவும் அதே சமயம் பதட்டம் இல்லாமலும் சென்றனர். முதல் மாடியில் மொத்தம் பத்து அரை உண்டு, அதில் ஒவ்வொரு அறையாக போய் தேடிப் பார்க்க வேண்டும். சாதாரண காரியம் இல்லை. சில அறையில் ஆட்கள் இருந்தனர். சில அரை பூட்டி இருந்தது. தட்டு தடுமாறி முன்னேற வேண்டி இருந்தது.

மொட்டை மாடியில் பெரியதாக ஒன்றும் இல்லை. கீழே மணமகன் அறைக்கு போய் பார்ப்பது தான் மிகவும் கடினமான வேலை.

கந்தன் " ராமு நீ dining hall -ல போய் பாரு, நான் store room போறேன், நீ மணமகன் அறைக்கு போய் பாரு கண்ணா" என்றான்.

கண்ணன் அத்தை அபிராமியின் மகன். கண்ணன் "என்ன மணமகன் அறைக்கா?? அங்கே ஏன் வந்த எதற்கு வந்தனு கேட்டா என்ன சொல்றது??" "சும்மா சொந்தக் காரங்க எல்லாரையும் கூட்டிட்டு போலாம்னு வந்ததா சொல்லி பேச்சு வாக்குல எங்க அம்மா அங்க வந்தாங்களான்னு கேளு. பேசறதுக்கு இது நேரம் இல்லை. நான் எங்க அம்மாவோட செல் போன்-கு பண்ணி பாக்கறேன்" என்று கூறியவன் தன கை பேசியில் இருந்து கல்யாணியை அழைத்துக் கொண்டே முன்னேறினான்.

கல்யாணியின் கைப் பேசி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. store room பூட்டி இருந்தது. திறந்து அங்கே எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தான். இல்லாததால் மீண்டும் சமையல் காரர்களிடம் பேசலாம் என்று சென்றான்.

ராமு ஓடி வந்தான் "கந்தா, இது உங்க அம்மாவோட செல் தானே??" அதை வாங்கிப் பார்த்த கந்தன் ஆமாம் என்றான். "இது dining hall போற வழீல கெடந்துது அதுவும் யாரோ தூக்கி எரிஞ்சாபுல இருந்துது. பின் பக்கம் தனியாவும் முன் பக்கம் தனியாவும் இருந்துது" என்றான் பதட்டத்துடன். அய்யய்யோ அப்ப அம்மாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதட்டத்துடன், கண்களில் நீர் வழிய மணமகள் அறையை நோக்கி ஓடினான் கந்தன்.

"அத்தை! அத்தை!! இதோ அம்மாவோட செல் போன். இது கை அலம்பர இடத்துக் கிட்ட சிதறிக் கேடந்ததா ராமு கொண்டு வந்து குடுத்தான்". மணமகள் அறையை நோக்கி ஓடுவதைக் கண்ட அபிராமியின் கணவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

"அப்படீனா உன் அம்மாவை யாரோ கடத்திட்டாங்களா??" என்றார் மாணிக்கம். "என்னது கடத்தலா? நமக்கு எதிரி என்று யாருமே இல்லையே?? யார் இந்த வேலைய செஞ்சு இருப்பா?" இந்த சமயம் பார்த்து உள்ளே வந்த மாலா ," என்னது கடத்தலா? யார கடத்திடாங்க??" என்றாள்.

இஞ்சி தின்ன குரங்கு போல் எல்லாரும் விழிக்க, நடந்தவற்றை சொன்னாள் அபிராமி. விஷயம் கேட்டு இடி விழுந்தது போல் ஆனாள் மாலா. "எனக்குன்னு இருந்தது ஒரே ஒரு சம்மந்தி அவங்கள யாரு கடத்தி இருக்க போறா??" என்றதும் இந்த நேரத்துலயும் அன்யோன்யதக் காட்டணுமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டனர்.

"யாராவது சின்ன குழந்தைங்க கிட்ட வெளயாட குடுத்து இருப்பா. அவங்க தூக்கி வீசி இருக்கலாம். எதையும் கற்பனை செய்யாம மத்தவங்க வர வரைக்கும் அமைதியா இருங்க."

"எப்படி அமைதியா இருக்கறது??? எனக்கு தலையே சுத்தரா போல இருக்கு" என்றார் மாலா.

தேடிச் சென்ற மற்ற அனைவரும் வந்து சேர கல்யாணி அந்த மண்டபத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். மாலாவும் அவள் கணவனிடம் சொல்லி
எல்லா அறையையும் திறந்து மீண்டும் தேடிப் பார்க்கும் படி சொன்னாள்.

கந்தனோ "நான் மீண்டும் சமையல் காரர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு வருகிறேன்" என்று சொன்னான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாய் வேட்டியை பிடித்த படி ஓடினான்.

சமயலறையில்..

"அம்மா இங்க வந்தாங்களா??" "இல்லையே தம்பி. இப்ப தானே வந்து கேட்டுட்டு போன. அப்பவே வந்துட்டு போய்டாங்க பா". "அம்மாவைக் காணோம்! நீங்க எப்ப கடைசீயா பாதீங்கனு சொன்னா எனக்கு உதவியா இருக்கும்".

"என்னது அம்மாவைக் காணமா?? அப்ப கல்யாணம் நடக்காதா?? நாங்க இலை போட வேண்டாமா??". " என்னங்க நீங்க எங்க கஷ்டம் புரியாம. அம்மாவை கடைசீயா எப்ப பாத்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க" என்று அதட்டும் தோரணையில் கூறினான் கந்தன்.

" இருவது இருவத்தஞ்சு நிமிஷம் இருக்கும் பா" என்றார். மறு பேச்சு பேசாமல் கெளம்பினான் கந்தன். இலை பரிமாறுவதை நிறுத்தி விடுமாறு கூறி விட்டு, இரண்டு மூன்று பேருடன் என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் வந்தார் தலைமை சமையல் காரர்.

இப்பொழுது எல்லார் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, "கல்யாணி எங்கே??" எனபது தான். மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு, ஒரு வாராக என்ன நடக்கிறது என்றும் புரிந்து விட்டது.

மணமகள் அறையில்...

அபிராமியின் கணவர் "ஒரு வேளை கல்யாணத்த நிறுத்தனும்னு யாரவது இவள தூக்கிட்டு போய்டாங்களோ?? ச என்னமா ஐடியா பண்ணி இருக்காங்க" என்றார்.

அபிராமி ஒரு முறை முறைத்ததும் "இல்ல மா நான் என்ன சொல்ல வரேன்னா..." "நீங்க சொன்னதே போதும் பேசாம இருங்க" என்றாள் அபி.

அந்த நேரத்தில் மாணிக்கத்தின் கைப் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. "ஏதோ முன் பின் தெரியாத எண்" என்றார் மாணிக்கம். எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க. "அந்த காலை அட்டென்ட் பண்ணுங்க பா" என்றான் கந்தன். "தைரியமா பேசுங்க" என்றார் மாமா.

பதட்டத்துடன்... "ஹலோ" என்றார் மாணிக்கம். மறு முனையில் பேசிய குரலை கேட்டு செய்வதறியாது முழித்தார் மாணிக்கம்.

6 comments:

LK said...

நல்ல விறுவிறுப்பு ...

சங்கவி said...

நல்லாயிருக்குங்க...

Harini Sree said...

Nandri LK anna mttum sangavi

Lakshmi said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

ஜெய்லானி said...

ரொம்பவும் தேட விட்டுடாதீங்க ..அம்மா பாவம் :-))

Harini Sree said...

அம்மா தான் கேடச்சுடாங்களே! இனிமே புதுசா யாரையாவது தொலைச்சா தான் உண்டு! :)