Monday, November 29, 2010

சிட்டி சென்டர் அனுபவம்!

சமீபத்தில் சென்னை R . K . சாலையில் உள்ள சிட்டி சென்டர்-இல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கூப்பன் ஒன்று அளிக்கப் பட்டது. ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் ஒரு கூப்பன் என்று குடுத்தார்கள். நாங்களும் ஒரு துணிக்கடையில் சென்று துணி வாங்கி இருந்தோம். எங்களுக்கும் கூப்பன்கள் அளிக்கப் பட்டது. அதை நிறைவு செய்து நுழை வாயிலின் உள்ளே வைக்கப் பட்டு இருந்த போட்டியில் போடுமாறு சொன்னார்கள். அவ்வாறே செய்தோம்.

சனிக் கிழமை இரவு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. எங்கள் மாமா பெயரில் நாங்கள் பூர்த்தி செய்த கூப்பனுக்கு பரிசு விழுந்திருந்தது. ஏதோ கிபிட் வௌசேர் என்றார்கள். மற்ற விவரங்கள் எதுவும் கூறவில்லை நாங்களும் கேட்டுக் கொள்ளவில்லை. ஞாயிற்றுக் கிழமை அவர்களின் எண்ணில் எங்கள் மாமாவை அழைக்க சொன்னோம் அப்பொழுது அந்தப் பெண்ணிற்கு விவரம் எதுவும் தெரியாததால் பாசித் என்பவற்றின் எண்ணைக் கொடுத்து அதில் அழைக்க சொல்லி இருந்தார்கள்.

அவர் மிகவும் தன்மையாக பேசினார். அவராலும் விவரம் எதுவும் தர இயலவில்லை. ஞ்யாயிற்றுக் கிழமை அதாவது நேற்று எங்களால் போக முடியாததால் நாங்கள் அவரிடம் திங்கட் கிழமை (அதாவது இன்று) வந்து வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டோம். அதற்க்கு அவர் நீங்கள் சிட்டி சென்டர் ஆபீஸ்-இல் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

நாங்களும் (நானும் என் தம்பியும்) ஊருக்கு செல்லும் பாக்கிங் வேலைகளுக்கு நடுவில் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அங்கே சென்றோம். ஹெல்ப் டெஸ்க்-இல் விசாரித்து சிட்டி சென்டர் அலுவலகத்தையும் அடைந்தோம். வெளியே செக்யூரிட்டியிடம் விவரத்தை சொன்னோம். அவர் "பிரதீப் குமார்" என்பவரை பார்க்குமாறு கூறினார். வேண்டிய தகவல்களை ஒரு நோட்-இல் பதிவு செய்து கை எழுத்தும் இட்டு விட்டு நானும் என் தம்பியும் உள்ளே சென்றோம். நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் சரியாக 3 .55 P .M .

அங்கே உள்ளே வரவேர்ப்பாளர் என்று நினைக்கிறேன் ஒரு பெண் இருந்தார். அவரிடம் நாங்கள் பிரதீப் குமார்-ஐ பார்க்க வந்திருப்பதாகவும் எதற்காக வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்தோம். அந்தப் பெண் அவர் இல்லை நீங்கள் நாளை வந்து தான் அந்த பரிசைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். நான் உடனே இந்த பரிசிற்காக எத்தனை முறை நாங்கள் வர முடியும்? வேறு யாரையாவது அணுகி எங்கள் வேலையே முடித்து தாருங்கள் என்றேன். இன்னொரு அறையில் இருக்கும் நபரை பார்க்கும் படி கூறினாள் அந்த பெண். ஆனால் அங்கும் யாரும் இல்லை.

உடனே அவள் மீண்டும் நாளை தான் வர வேண்டும் என்றாள். எனக்கு பயங்கர கடுப்பாகி விட்டது. ஒரு ஆபீஸ்-இல் யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்று கூடவா தெரியாது?? சாயங்காலம் நான்கு மணிக்கே எல்லாரும் பொய் விட்டால் பின்பு ஆபீசை மட்டும் எதற்கு திறந்து வேயத்திருக்க வேண்டும்?? நானோ என்னால் மீண்டும் வர முடியாது வேலை இருக்கிறது இன்று வர சொல்லி பாசித் தான் கூறினார் என்று சொன்னேன். உடனே அவள் அங்கு இருந்த சிலரிடம் நீங்களே பேசுங்கள் என்றாள். (அந்தப் பெண்ணிற்கு சம்பளம் தண்டம் தான் போலும் பாவம்!).

சரி என்று அங்கு இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்த அறையின் நுழை வாசலில் சென்று நான் எதற்கு வந்திருக்கிறேன் என்று கூறினேன். அவர்களும் அதே பதிலைக் கூற எனக்கு கடுப்பு அதிகம் ஆகி விட்டது. ஒரு பெரிய சிட்டி சென்டர்-இல் பொறுப்பாக பதில் கூற யாருமே இல்லையா?? பிறகு நான் மீண்டும் வலியுறுத்தியதும் யாருக்கோ போன் பண்ணி கேட்டார்கள். கேட்ட பின் "உங்களை யார் இங்கு வர சொன்னார்கள்?" என்று அதில் ஒருவர் கேட்டார். நானோ "உங்க பாட்டி" என்று சொல்லி இருப்பேன் ஆனால் அதை சொல்லாமல் "Mr . பாசித்" என்றேன். உடனே அவரோ "அப்படி ஆனால் நீங்கள் அவரை தான் அணுக வேண்டும். அழைப்பு எண் தருகிறோம் நீங்களே அழைத்து பேசுங்கள்." என்றார்.

நானோ "நான் ஏன் அழைக்க வேண்டும்? நீங்கள் தானே இந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் நீங்களே அவரை அழைத்து பேசுங்கள் என்றேன்." அதில் ஒரு அறிவுக் கொழுந்து கூறியது இது தான் " நாங்கள் இந்த ஆபீஸ்-இல் தான் வேலை பார்க்கிறோம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார். பாவம் திறந்த வீட்டில் நாய் நுழைந்தது போல் யார் வேண்டுமானாலும் சிட்டி சென்டர் அலுவலகத்தில் நுழைந்து விடலாம் போல இருக்கிறது.

நான் ஒன்றும் கூறாமல் இருந்தேன். அவர் " நாங்க உங்களுக்கு ஹெல்ப் தான் மேடம் பண்றோம்" என்றார். வந்ததே எனக்கு கோவம் "நீங்கள் என்ன சும்மாவா தருகிறீர்கள்? நாங்கள் வாங்கின பொருளுக்கு குடுத்த கூப்பனுக்கு விழுந்த பரிசைத் தானே தருகிறீர்கள்" என்றேன்.

உடனே அவர் "நாங்கள் டெக்னிகல் பீபள்" என்றார். நானோ "நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். யார் வந்து நீங்கள் டெக்னிகல் பீபள்ஆ என்று பார்க்க முடியும்? ஆகவே நீங்கள் டெக்னிகல் பீபள் என்றும் கூறலாம் ஆபீஸ் பாய் என்றும் கூறலாம். போன் நம்பரை தாருங்கள் நானே அழைத்து பேசுகிறேன்" என்றேன். அவரோ நான் கூறியதைக் கேட்டு போன் நம்பர் தராமல் பேசாமல் இருந்தார். நான் மீண்டும் மீண்டும் கேட்டும் குடுக்காமல் இருக்கவே என் குரலை உயர்த்தியதும் வேறு ஒருவர் தந்தார்.

பாசித் அவர்களுக்கு போன் செய்து பேசிய பின்பு அவர் என்னை சற்று நேரம் காத்திருக்கும் படி கூறினார். அதை அங்கே இருந்தவர்களிடம் கூறி, உக்கார நாற்காலி குடுங்கள் என்று நான் கேட்ட பின் வெளியே செக்யூரிட்டி-இடம் பொய் உக்காருங்கள் என நாயை விட கேவலமாக நடத்தினார்கள். அங்கே சென்று செக்யூரிட்டி இடம் நடந்தவற்றை கூறினேன். அவர்களால் என்ன செய்ய முடியும்?? அவர்களுக்கு தெரிந்த மரியாதை கூட பன் மடங்கு சம்பளம் வாங்கும் இவருக்கு தெரியவில்லை.

இரண்டு நிமிடத்தில் ஒருவர் வந்து கடனுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள "லைப் ஸ்டைல்" கூபனை குடுத்தார். யார் பெயருக்கு பரிசு விழுந்திருக்கிறது. உங்கள் கூப்பன் எங்கே? எதுவும் கேட்க்கவில்லை. என்னை அங்கே இருந்து துரத்தினால் போதும் என்று நினைத்தார்கள் போலும். வந்தவர் ஒரு போர்மலிட்டிகாக என் பெயரை கேட்டார். நானும் கூறி விட்டு நன்றியும் கூறினேன். அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை நான் நன்றி கூறுவேன் என்று.

டெக்னிகல் பீபள் என்றாலும் அந்த அலுவலகத்தில் தானே வேலை செய்கிறார்?? அவருக்கும் அந்த அலுவலகத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் பின்பு எதற்காக இந்த பேச்சு?? போனவர்களை ஒழுங்காக வரவேற்கவும் இல்லை சரியான அணுகு முறையும் இல்லை. உக்கார ஒரு நாற்காலி கூட இல்லை. உக்கருங்கள் என்று சொல்ல நாதியும் இல்லை. டெக்னிகல் பீப்லாக இருந்தால் என்ன ரெண்டு கொம்பா முளைத்து விட்டது?? இதுவே நான் ஒரு அட்வேர்டைசெமென்ட் கொடுப்பதற்காக சென்று இருந்தால் அங்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு.

என்னவோ அவர் சட்டைப் பயில் இருந்து எடுத்து குடுப்பது போலவும் நான் அங்கே பிச்சை வாங்க வந்தவள் போலவும் நடத்தினர். அது மட்டுமா எனக்கு உதவி செய்கிறாராம். பாவம் என்ன நான் இவரிடம் பணத்திற்காகவா போய் நின்றேன்??? எனக்கு விழுந்த பரிசை எனக்கு குடுப்பதற்கு இவ்வளவு ஆர்பாட்டம். சிட்டி சென்டர்-இல் வேலை செய்யும் யாரேனும் இதைப் படிக்க நேரிட்டால் உங்களுக்கு நான் கூற நினைப்பது இது ஒன்று தான் "வேலைக்கு ஆள் எடுக்கும் பொது அவருக்கு பண்பும் தெரிந்திருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால் , எங்களைப் போன்ற மக்கள் இல்லை என்றால் சிட்டி சென்டர் போன்ற மால்-கள் இல்லை. அப்படிப் பட்ட மால்-கள் இல்லை என்றால் இவரைப் போன்ற ஆசாமிக்கு வேலையும் இல்லை."

இவரைப் போன்ற ஆட்களுக்கு அவர்கள் பண்ணும் தவறு தெரிய வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். அடுத்த பதிவில் சிந்திப்போம். ஹரிணி ஸ்ரீ.

11 comments:

LK said...

இதுக்குதான் இந்த மாதிரி கூப்பன் நான் பில் பண்றது இல்லை

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

Harini, Nothing is FREE in this world!

இது ஒரு வெத்து விளம்பரம். நம்மளோட நம்பரையும் அட்ரசையும் எடுத்து டேட்டாபேஸ் க்ரியேட் பண்ணி நல்ல ரேட்டுக்கு வித்துடுவாங்க நமக்கே தெரியாத நம்பர்லேர்ந்தெல்லாம் எஸ் எம் எஸ் வர்றது இதனாலதான். இது போன்ற கூப்பன்களை ஃபில் அப் செய்யாமலிருப்பது நல்லது. அப்படியும் சில புத்திசாலிகள் நம்மைக் கட்டாயப்படுத்துவார்கள். அப்பொழுது ரயிலில்,பஸ்ஸில் இருக்கும் உடனடி வேலை, தொப்பை குறைக்கும் ஜிகினா விளம்பர போஸ்டரில் உள்ள நம்பரை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது! :))

Harini Sree said...

@LK ungalukku yerkanave theriyum oru murai inox-il padam paarthu vittu varum pozhuthu ennavar angu yaarukko number kuduthu athan pin yenna aanathu endru athil irunthu theriyaathavargalukku number kudupathu illai

Harini Sree said...

@Shankar

Naangal fill up seitha coupon naangal thuni vaangiya kadayil naangal vaangina thuniyin mathippirkku thagunthaar pol tharappattathu. neengal solvathu pol free endru solli yematrum gumbalgalum ithu pondra maal-galil alaigindrana. Ithu kaunda mani avargal oru padathil thuni vaangi sappaan naattukku selvaare athu maathiri endru veithuk kollalaam :P avar sappan sendru thaan avasthai pattaar naangal ingeye avasthai pattom. avvalavu thaan. :) Karuthirkku nandri neengal solvathu pol ippadi number kuduthu en nanbar oruvar avasthai pattu irukiraar. athil irunthu maalgalil ithu pol anavasiyamaaga number ketaal kudukka koodathu endru mudivu seithullen.

Lakshmi said...

சரியான ஏமாத்துவேலையா இருக்கே?////

Thanglish Payan said...

This is what corporate fraud..
Nobody take resonposibilites, if you give money to them everybody will take care of you and they will give full respect too... :)

India going to face this in coming days..

சி. கருணாகரசு said...

இப்படிதாங்க சாட்டைய சுழட்டனும்....
பாராட்டுக்கள்.

Harini Sree said...

@Lakshmi

Sariya sonnenga

@Thanglishpayyan

Already India is facing these kind of problems in a big extent.

@Karunagarasu

Saataya suzhatti adi namma melayae padaatha varaikum sari :)

அப்பாவி தங்கமணி said...

கொடுமை தான் ஹரிணி...கஸ்டமர் சர்வீஸ் எல்லாம் விடு,Basic manners கூட புரியாம என்ன இப்படி செய்யறாங்க... உக்கார சொல்ல கூட முடியாம போய்டுமா என்ன... இந்த விட்டேத்தியான குணம் இப்ப ரெம்ப பரவலா இருக்கு மக்கள் கிட்ட...ரெம்ப வருத்தத்திற்கு உரிய விஷயம்...

ஜெய்லானி said...

தப்பு பண்ணிட்டீங்க..அபப்டியே ஒரு போட்டோவை எடுத்து நாளை பிளாகில ,ஃபேஸ்புக்கில போட்டுடுவேன்னு மிரட்டி இருக்கலாம் தானே..!! அதுக்கு பிறகு உங்களை எபப்டி கவனிச்சி இருப்பாங்க சான்ஸ் விட்டுடீங்க ஐயோ பாவம் ....

நீங்கதான் , அவங்க இல்லை.

Harini Sree said...

@ஜெய்லானி

நான் உங்களுக்கு உருப்படியா அந்த எடத்த விட்டு வெளில வந்தது பிடிக்கல போல?? உங்க ஆம்லேட்டே போஸ்ட் படிச்ச அப்பவே புரிஞ்சுண்டேன் நீங்க எவ்ளோ ஒ ஒ ஒ ஒ ஒ நல்லவர்னு! :P