அம்மாவைக் காணோம்! - 1 (இங்கே)
அம்மாவைக் காணோம்! - 2 (இங்கே)
பதட்டத்துடன்... "ஹலோ" என்றார் மாணிக்கம். மறு முனையில் பேசிய குரலை கேட்டு செய்வதறியாது முழித்தார் மாணிக்கம்.
"ஹலோ பெரியப்பா! நான் தான் ஷ்யாம் பேசறேன். கல்யாணம் முடிஞ்சாச்சா?? முஹூர்த்தம் முடியறதுக்குள்ள கால் பண்ணினா, அந்த கெட்டி மேள சத்தமாவது கேக்குமேனு போன் பண்ணினேன். அம்மா செல்லுக்கு தான் பண்ணினேன் ஆனா அம்மா எடுக்கல. எல்லாரும் பயங்கர பிஸி போல? சாரி பெரியப்பா, இந்த நேரத்துல தொந்தரவு பண்ணினதுக்கு." என்று பட படவென பேசி தீர்த்தான் ஷ்யாம்.
" ஷ்யாம் நீ தானா. நான் யாரோ என்னவோனு பயந்தே போயிட்டேன். தாலி கட்டறதுக்கு முன்னாடி நானே உன் செல்லுக்கு கூப்டறேன் " என்று எப்படியாவது ஷ்யாமிடம் இருந்து நடந்தவற்றை மறைக்க முயற்சித்தார் மாணிக்கம்.
"என்ன பயந்து போய்டீங்களா?? ஏன் வேற யாராவது கொள்ள காரங்க போன் பண்ணுவாங்கனு நெனசீங்களோ??" என்று மறு முனையில் நக்கலாக கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
" பயம்னா சொன்னேன்?? பதட்ட பட்டு பொய்ட்டேன்னு சொல்ல வந்து பயம்னு ஒளறி இருப்பேன்" என்று மழுப்ப முயன்றார் மாணிக்கம்.
"பதட்டமா?? எதுக்கு பதட்ட படணும்??"
என்ன சொல்லி மழுப்புவது என்று தெரியாமல் சந்தையில் காணமல் போன குழந்தை போல விழித்தார் மாணிக்கம்.
" சரி சரி நீங்களே உங்க பொண்ணு உங்கள விட்டு வேற வீட்டுக்கு போற சோகத்துல இருப்பீங்க. கல்யாணத்துக்கு என்ன மாதிரி VIP யாரும் வரலயேனு வேற உங்களுக்கு தனி கவலை இருக்கும். இதுல நான் வேற ஏன் உங்கள களாச்சு உங்க டயத்த வேஸ்ட் பண்ணனும். பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்டறேன் பெரியப்பா" என்றான் ஷ்யாம்.
"இல்லை வேண்டாம். கல்யாணம் நடக்கும் போது நானே கூப்டறேன். அதாவது தாலி கட்டும் போது நானே உங்க அப்பவ விட்டு கூப்பிட சொல்றேன்" என்று தட்டு தடுமாறி முடித்தார் மாணிக்கம்.
"என்னோட செல் போன் ரிப்பேர்-ல இருக்கு. நானே என் ஆபீஸ் போன்ல இருந்து ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்டறேன். எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. bye " என்று இணைப்பை துண்டித்தான் ஷ்யாம்.
இனிமேலும் காலம் தாழ்த்துவது சரி அல்ல என்ற முடிவிற்கு வந்தனர். சம்மந்தி வீட்டாருடன் கலந்தாலோசித்து ஒரு முடிவிற்கும் வந்தனர்.
மாணிக்கம் மெதுவாக மேடை அருகே சென்று உரத்த குரலில் "எல்லாரும் தாமதத்திற்கு மன்னிக்கவும். கல்யாணியைக் காணம்! அவளைத் தான் இத்தனை நேரம் தேடிக் கொண்டு இருந்தோம். இந்த இருவது நிமிஷத்துல கல்யாணியை யாராவது எங்கயாவது பாத்து இருந்தா தயவு செஞ்சு எங்க கிட்ட சொல்லுங்க. இன்னும் சில நிமிடங்கள் காத்து இருக்கலாம். அப்பாவும் கல்யாணி எங்கனு தெரியலேனா அப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம். எல்லாரும் அமைதியா இருங்க." என்று தழு தழுத்த குரலில் கூறினார்.
எல்லாம் அப்படியே ஒரு சில வினாடிகள் ஸ்தம்பித்து நிற்க. பின்பு அங்காங்கே கூட்டம் கூட்டமாய் பேசத் தொடங்கினர். சத்திரத்தில் இருக்கும் அனைவரிடமும் விசாரணை ஆரம்பமானது.
எல்லாரும் அவர்கள் அவர்கள் வேலையில் மும்மரமாக இருக்க, யாருக்குமே கல்யாணி எங்கே என்று தெரியவில்லை. கல்யாணியை இறுதியாய் அங்கு பார்த்தோம், இங்கு பார்த்தோம் என்ற பல தகவல்கள் மேலும் குழப்பத்தை தான் அதிகரித்தது. அந்த நேரம் பார்த்து கந்தன் சமையல் காரரிடம் "ஆமாம் உங்களுடைய இரண்டு மகன்களும் எங்கே?" என்று வினவினான்.
அவரோ " வீடு வரைக்கும் பொய் இருக்காங்க. என்னோட பொண்டாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதான் பாத்துட்டு வரேன்னு பொய் இருக்கா ரெண்டு பெரும்." என்றார்.
கந்தனின் அருகில் இருந்த ஒருவரோ திடீரென்று " அவர்கள் பின் வாசல் வழியாக ஏதோ மூட்டை மாதிரி ஒன்ன எடுத்துட்டு போறத நான் பாத்தேன்" என்றார்.
" என்னது மூட்டையா? எவ்வளவு பெருசு இருக்கும்?" என்றார் மாணிக்கம். " அது இருக்கும்க ஒரு அஞ்சு வயசு கொழந்த ஒசரத்துக்கு" என்றார். அதே நேரம் சமையல் காரரோ "இல்லை இல்லை ஒரு மஞ்ச பையில் தான் வேண்டாத சாமான்களை குடுத்து அனுப்பினேன். எல்லா பாத்ரதையும் தூக்கிட்டு போறது கஷ்டமாயிடும் இல்லையா அதான்" என்று மழுப்பினார். அனால் அந்த புது நபரோ அடித்துக் கூறினார் அது மூட்டை தான் என்று.
எல்லோர் சந்தேகமும் இப்பொழுது சமையல் காரரின் மேல் விழ. அவர் தான் கடத்தல் காரர்களுடன் சேர்ந்து கல்யாணியை கடத்த உதவி செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
சமையல் காரரை போட்டு குடைய ஆரம்பிக்க. அவரால் உண்மையையும் சொல்ல முடியவில்லை பொய் சொல்லவும் தெரியவில்லை. உண்மையை சொன்னால் சமையல் ஆர்டர் இனிமேல் யாரும் தர மாட்டார்கள். பொய் சொல்லி சமாளிக்க அனுபவம் இல்லை. அவருடைய வேலை ஆட்கள் உதவியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி அவரின் வீட்டிற்க்கே சென்று பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.
ஒரு வாராக சலசலப்பு அந்த இடத்தில் நிலவ. சற்று குழப்பத்துடன் முன் வாசல் வழியாக வந்தனர் சமையல் காரரின் மன்கங்கள் இருவரும்.
"என்ன அங்க கூட்டம்?" என சின்னவன் வினவ.
"வாங்க டா திருட்டு பசங்களா... உங்கள தான் தேடிட்டு இருக்காங்க எல்லோரும். அவங்களை அமுக்கி புடிங்க டா" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்த. பொருட்களை திருடியது தான் அம்பலம் ஆகி விட்டது போலும் என்று பயந்து ஓட முயன்றனர் இருவரும்.
ஆனால் அதற்குள் அவர்களின் வழி மறித்து, இரண்டு அடி போட்டு இழுத்து வந்தனர் கூட்டத்தில் சிலர். "அடிக்காதீங்க பாவம்" என்றார் அத்தை.
"ஒரு அம்பது வயசு பொம்பளைய கடத்தி இருக்காங்க பின்ன மடியில உக்கார வெச்சு கொஞ்சவா முடியும்?" என்றார் ஒருவர்.
"அட அவங்க கடத்தினாங்களா என்னனு விசாரிக்காமலே அடிக்காதீங்க. அப்படியே தப்பு பண்ணி இருந்தாலும் நாம போலீஸ் கிட்ட தான் சொல்லணும். எல்லாரும் கொஞ்சம் விலகி இருங்க. அவங்க பயப்படாம இருந்தா தான் பேசுவாங்க" என்றான் கந்தன்.
"இங்க பாருங்க பா, என்ன உங்க அண்ணா மாதிரி நெனச்சுக்கோ. நீங்க சாக்கு மூட்டைல எதையோ கட்டி எடுத்துட்டு போனிங்களாமே? அது என்னனு ஒழுங்கா சொல்லிடுங்க" என்றான் கந்தன்.
கூட்டத்தின் நடுவே இருந்து சமையல் காரர் வாயை திறந்து எதையும் சொல்லாதே என சமிக்யை செய்ய, " அது வந்து... வந்து..." என இழுத்தான் பெரியவன். "அது வேற ஒன்னும் இல்லீங்க அண்ணா, இங்கே தேவை இல்லாத சாமான் மற்றும் குப்பைகள்" என்றான் சின்னவன்.
அவர்களின் தடுமாற்றத்தையும், பொய்யையும் கண்டு சிலருக்கு கோபம் வந்தது. நிதானத்தை மெல்ல இழக்க துவங்கினர்.
"நீங்க எதுல எல்லாத்தையும் கட்டி எடுத்துட்டு போனீங்க?" என்று வினவினாள் சித்தி.
சின்னவனோ சாமர்த்தியமாக பேசுவாதாக நினைத்துக் கொண்டு " அதான் அண்ணா சொன்னாரே சாக்குப் பை. அதுல தான்" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
உடனே மாமாவோ "இப்பவாவது உண்மைய ஒத்துக்கோங்க சமையல்காரரே. இல்லேனா போலீஸ் வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிப்போம். ஒழுங்கா சொல்லுங்க கல்யாணி எங்கே?" என்று அவர் துண்டை பிடித்து மிரட்டினார். அவரோ கண்களில் நீர் துளிர்க்க வாய் திறக்க முடியாத நிலையில் இருந்தார்.
கூட்டத்தில் எல்லாரும் கத்த ஆரம்பிக்க. சத்தம் மெல்ல அந்த இடத்தை நிரப்பிக் கொண்டே வந்தது.
"நிறுத்துங்க!" என்றது ஒரு மெல்லிய குரல். யார் என்று எல்லோரும் திடுக்கிட்டு பார்க்க. ஒரு நாற்காலியின் மேல் எரிக் கொண்டு உரத்த குரலில் கத்தியது சமையல்காரரின் இரண்டாவது மகன்.
"என்ன திமுரு டா உனக்கு. பண்ற தப்பை எல்லாம் பண்ணிட்டு அதிகாரம் வேற பண்றியா?" என்று குச்சியை ஓங்கினார் ஒரு பெரியவர். ஓடிச் சென்று அதை தடுத்தான் கந்தன்.
"ஐயோ என்ன பேச விடுங்க. இங்க என்ன பிரச்சன? அத சொல்லாம எங்கள விசாரிச்சா எங்களுக்கு என்ன புரியும்?" என்றான் சின்னவன்.
அவன் தைரியத்தையும், துணிச்சலையும் கண்டு அனைவரும் வியந்தனர். அவர்கள் செய்த தவறும் அவர்களுக்கு மெல்ல விளங்கியது.
"என்னோட அம்மாவை ஒரு இருவத்தைந்து நிமிஷமா காணம். எல்லா எடத்துலயும் தேடியாச்சு. எங்கயும் இல்லை. நீங்க ஏதோ மூட்டைல கட்டி எடுத்துட்டு போறதா தகவல் வந்துச்சு. ஒரு வேள யாரவது கடத்தல் காரங்களுக்கு உதவி செஞ்சு இருகீங்களான்னு தெரிஞ்சுக்க தான் இங்க விசாரணை நடக்குது. இப்பவாவது சொல்லு பா அந்த மூட்டைல என்ன இருந்துச்சு?" என்று மூச்சு விடாமல் பேசினான் கந்தன்.
" என்ன கல்யாணி அம்மாவக் காணமா? வெளையாடாதீங்க. 'தலைய சுத்துது காபி கொண்டு வா டா கண்ணான்னு' அவங்க கேட்டதும் துள்ளி அடிச்சுட்டு காப்பிய குடுத்துட்டு வந்தேனே. அவங்க dining ஹால்-ல தான் இருந்தாங்க அப்ப" என்றான் சின்னவன்.
உடனே எல்லாரும் பர பரவென dining ஹால்-ஐ நோக்கி ஓட அங்கு எங்கும் கல்யாணி தென்படவில்லை. காபி குடுத்த இடத்தை நோக்கி ஓடினான் சின்னவன். அங்கே டேபிள்களில் "frill arrangements " எனப் படும் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதால் அருகில் சென்று பார்த்தும் தான் தெரிந்தது கல்யாணி அங்கே மயங்கி விழுந்து கிடந்தாள்.
"அம்மா இங்க தான் இருக்காங்க!" என எல்லாரும் ஒரு வாராய் கத்த. சற்று தண்ணீர் தெளித்து கல்யாணியை எழுப்பினர்.
மெல்ல கண் திறந்த கல்யாணி "என்ன ஆச்சு? எத்தனை நேரம் இப்படியே மயங்கி கெடக்கேன்?" என்றாள். "அம்மா நீ முதல்ல கடச்சியே அதுவே போரும். மத்தத எல்லாம் அப்புறம் சொல்லறோம். உன்னைக் காணாம நாங்க தவிச்சு போய்ட்டோம். சமையல்காரர் மேல கூட சந்தேகப் பட்டோம். சக்கரை இருக்கற நீ, வேளா வேலைக்கு சாப்டனும்னு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்?" என்றாள் மணப் பெண்.
"என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. பொண்ணோட கல்யாணத்துல ஓடி ஆடி வேலை செய்யறப்ப நம்ம பசி கண்ணுக்கு தெரியாம போயிடுது. எல்லாம் என் தப்பு தான். சரி நேரம் ஆகறதுக்குள்ள மண மேடைக்கு போகலாம் வாங்க" என்றாள் கல்யாணி.
"டேய் ராமு, நீ மட்டும் இங்க ஒழுங்கா தேடி இருந்தேனா இவ்வளவு அவச்த்தையும் இல்லை டா" என்றார் அத்தை. "இனிமேலாவது பதட்ட படாம ஒழுங்கா ஒரு வேலைய செய்யக் கத்துக்கங்க பசங்களா" என்று தொடர்ந்தார். "இந்த சின்ன குழந்தைக்கு இருக்கற பக்குவமும் பொறுமையும் நமக்கு இல்லை. எங்களை மன்னிச்சுடுங்க சமயல்காரரே" என்றார் அத்தை.
எல்லாரும் சமையல்காரரிடம் மன்னிப்பு கேட்க மாணிக்கமோ "நாங்க இருந்த நெலமைல என்ன யோசிக்கரதுனே புரியல. அதுனால தான் இப்படி ஒரு தவறு நடந்துடுச்சு. எங்கள கண்டிப்பா நீங்க வாய தொறந்து மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்" என்றார்.
"இல்லை அய்யா நீங்க எல்லாரும் தான் என்ன மன்னிக்கணும். என் சின்ன பையன் சொல்ல சொல்ல கேக்காம நானும் மண்டபத்துலருந்து கொஞ்சம் சாமான்களை திருட்டு தனமாய் வீட்டுக்கு குடுத்து அனுப்பினேன். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தானே ஆகணும். இனிமே பேராசை படவே மாட்டேன். அதுனால நான் பட்ட பாடு போரும்" என்றார் கண்களில் நீர் பெருக.
" உங்க தவற நாங்க மன்னிச்சுட்டோம். நீங்களும் எங்களை மன்னிச்சுடுங்க. உங்க சின்னப் பையன் மட்டும் பொறுமையா எங்க கிட்ட பெசலேனா இந்த கல்யாணம் நடந்து இருக்காது. அடடே இந்த கூத்துல கல்யாணத்த மறந்தாச்சு. வாங்க எல்லாரும் மண மேடைக்கு போகலாம். ஆமாம் நித்யா எங்க?"
"அவ மண மேடைல ரெடியா இருக்கா. நீங்க எல்லாரும் தான் பாக்கி சீக்ரமா வாங்க" என அய்யர் அங்கே இருந்து குரல் குடுக்க. "அட அவ்வளவு அவசரமா?" என மாமா நக்கல் அடிக்க. எல்லாரும் சிரித்துக் கொண்டே மண மேடையை நோக்கி நடந்தனர்.
மேளம் கொட்டவும் ஷ்யாம் போன் பண்ணவும் சரியாக இருந்தது. தாலி கட்டி முடித்ததும் மாப்பிள்ளை "நித்யா, எதுக்கும் நீ கூட யாரையாவது துணைக்கு வெச்சுக்க. ராத்திரி நேரம் பாத்து எங்கயும் காணாம போய்ட போற" என்றார். அதைக் கேட்டு நித்யா வெக்கத்தில் திரு திருவென முழிக்க, எல்லோரும் ஆனந்தக் கண்ணீருடன் மணமக்களை வாழ்த்தினர்.
நீங்களும் வாழ்த்தி விட்டு, அப்படியே போகாமல் விருந்துண்டு போகுமாறு கேட்டுக் கொள்ளுவது ஹரிணி ஸ்ரீ.
இந்தக் கதை இனிதே நிறைவு பெறுகிறது. மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம். அதுவரை டாடா! Bye !
12 comments:
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்.. இனி பின்தொடர்கிறேன்...
ஹ்ம்ம் நல்லா இருக்கு
@philosophy Prabhakaran
முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்...
@LK
நன்றி
//நீங்களும் வாழ்த்தி விட்டு, அப்படியே போகாமல் விருந்துண்டு போகுமாறு கேட்டுக் கொள்ளுவது ஹரிணி ஸ்ரீ.//
ஆஹா.. கல்யானம் எப்போன்னு சொல்லவே இல்லையே..
wow...kadhai potta kadhaye enakku theriyalaa...edhesachayaa paathen un blog innaikki...super kalakkal... (modhalla Junela nadakkaradhukku edhuno preview showvonu nenaichutten..sorry...ha ha)
@ஜெய்லானி
இந்த கல்யாணம் முடிஞ்சு போச்சு. என் கல்யாணம் ஜூன்ல தான். கண்டிப்பா அழைப்பு அனுப்பறேன். அப்புறம் டிக்கெட் எல்லாம் கேக்க கூடாது ஆமாம் சொல்லிட்டேன். :P
@அப்பாவி அக்கா
நானும் எவ்வளவு நாள் தான் பிஸியா இருக்கற மாதிரியே நடிக்கறது??? அப்புறம் அந்தக் கதைய வெச்சு தன ப்ளோக்ல கதை பண்ணிடுவேன்னு மேரட்டினார் ஜெய்லானி அதான் சத்தம் போடாம வந்துட்டேன். இனிமே ஏதாவது ஒரு வழியில ப்ளாக் அப்டேட் பண்ணினதா தெரிவிக்கறேன். இந்த மாறி தான் பல பேரு நான் இந்த கதைய எழுத ஆரம்பிச்ச அப்பா நெனச்சாங்க. எங்க அம்மாவ பத்திரமா பிடிச்சு வெச்சுக்கறேன் கல்யாணத்தன்னிக்கி! :P
அப்பாவி , கதை எழுதினா இப்படி எழுதணும். ஆரமிச்ச வேகத்தில் முடிக்கணும். உன்னை மாதிரி மெகாத் தொடர் இல்லை
LK - chance kedachaa viduviyaa nee...ha ha ha...brevity is very far from appavi...what to do?ha ha
மூனு பார்ட் எல்லாம் படிக்கலைப்பா மூனாவது பார்ட் படிச்சதுக்கு இலைல உள்ளதை நான் சாப்டுக்கறேன் ஓக்கேவா?
ஜூன் கல்யாணத்தை இப்பவே பாத்த மாதிரி இருக்கு!..;PP
@Thakkudu
hahahaha saptukongo no issues. aana june kalyanathula enga amma kanama poga maatale??! :P
நல்லா கதை வுடுறீங்க ...சே ... சொல்றீங்க
"இந்த சின்ன குழந்தைக்கு இருக்கற பக்குவமும் பொறுமையும் நமக்கு இல்லை. எங்களை மன்னிச்சுடுங்க சமயல்காரரே" என்றார் அத்தை//
கருத்துள்ள கதை.பாராட்டுக்கள்.
Post a Comment