இத்தனை நாளாக சொந்த வேலைகளில் பிஸி-ஆக இருந்த நான் "வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..." அப்டீன்னு பாடிண்டே வந்து இருக்கேன். ஹலோ ஹலோ எங்க எல்லாரும் ஓடறீங்க??? நான் பாடறது உங்களுக்கு கேக்காது, கவலை படாம மேல படியுங்க...
"அப்படி என்ன சொந்த வேலை???" அப்டீன்னு நீங்க முணு முணுக்கறது என் காதுல விழர்து. "ஒன்றா ரெண்டா வேலைகள் எல்லாம் சொல்லவே ஒரு போஸ்ட் போதுமா??" போதாது தான்...
இருந்தாலும் என் மேல பாசம் வெச்சு சளைக்காம எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குனு அடிக்கடி நினைவு படுத்தின ஜெய்லானி-காகவும் (என் ப்ளாக்-அ ஏலம் போடப் போறதா கூட அவர் மேரட்டினார். அதுக்கு கூட நான் அசரல! :D), நான் இப்ப எழுதலாம்னு இருக்கேன்; அப்ப எழுதலாம்னு இருக்கேன்னு சொன்னதெல்லாம் அப்டியே நம்பின lk -அண்ணாகாகவும், எப்ப பாரு என்ன வெச்சு நக்கல் பண்ணிண்டு இருக்கற தக்குடுகாகவும் உண்மைய சொல்லிடறேன்.
முதல்ல நல்ல செய்தி எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆக போறது. இதுனால தான் நான் ப்ளாக் பக்கமே வரது இல்லன்னு யாரவது வதந்தி கெளப்பி விட்டா அத எல்லாம் நம்பாதீங்க. கொஞ்ச நாள் எனக்கு ஒடம்பு சரி இல்லாம இருக்கும், கொஞ்ச நாள் என் கணினி-க்கு ஒடம்பு சரி இல்லாம இருக்கும். இப்படியே நாட்கள் வாரங்கள் ஆகா வாரங்கள் மாதங்கள் ஆயிடுத்து! இதை தவிர வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களும் உண்டு.
என் ப்ளாக்-அ விடாம வந்து பாத்தவங்களுக்கும், என்னை போஸ்ட் போடுமாறு அடிக்கடி கேட்டவங்களுக்கும் நான் சொல்றது ஒண்ணே ஒண்ணு தான் "இனிமே இந்த மாதிரி தடை வராம இருக்க முயற்சிக்கறேன். உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் ப்ளாக்-ஐ படிக்க வாருங்கள்"
நான் படிக்காம விட்ட போஸ்ட்-ஐ எல்லாம் இந்த ஒரு வாரதுக்குள்ள படிச்சு முடிசுடவும் திட்டமிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு போஸ்ட்-ஆவது போட முயற்சிக்கிறேன். தொடர்ந்து என் ப்ளாக்-இற்கு வந்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் (இது என் சொந்த வசனம். காபி அடித்தது அல்ல)
பி.கு. தலைப்பில் உள்ள எழுத்துப் பிழையை பார்த்தவர்களுக்கு மட்டும் (ஒடனே போங்காட்டம் ஆட கூடாது :P )
அது வேண்டுமென்றே செய்யப் பட்டது. சிறிய வயதில் நான் அப்படி தான் "sorry for the break "-ஐ படிப்பேன். தொடர்ந்து சந்திப்போம். இப்படிக்கு ஹரிணி ஸ்ரீ
4 comments:
திரும்ப வந்ததில் மகிழ்ச்சி :-)) . இனி விடற மாதிரி இல்லை வாரம் என்ன தினமும் போடுங்க ..ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிடுங்க அது
//என்னை போஸ்ட் போடுமாறு அடிக்கடி கெட்டவங்களுக்கும்//
யாரு அந்த கெட்டவங்க ..!!ஹா..ஹா.. :-))
ஒன்னே ஒன்னு மாறி இதுவும் கெட்டவங்க ஆகி விட்டது! :P சுட்டி காட்டியதற்கு நன்றி மாத்திடறேன்! :)
welcome back
Nandri! :)
Post a Comment